பக்கம்:மனை ஆட்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18


18 கு. இராது -அது அசாத்தியம் இரண்டு மூன்று தினங் களாக, ஏதோ அப்படி ஒரு வதந்தி கேள்விப்பட்டேன் -ஆயினும், அதை நான் நம்பவேயில்லை.

மோ. குண்டுராவ், நீங்கள் கூட நம்பாத வதந்திகள் இந்த உலகத்தில் ஏதாவது இருக்கிறதோ ? ஆம்-இருக்கின்றன.- வதந்திகளிலும் வதந்திகள் இல்லையா ? இந்த வதந்திகளெல்லாம் இல்லாவிட்டால் இவ்வுலகம் எப்படி உயிர் வாழ்வது ?


கு. ஆம், நீங்கள் சொல்வது சரிதான் !-இந்த உலக வாழ்க்கைக்கு வதந்தி சட்னியைப் போலவாம்; அது இல்லாவிடில் சமூக வாழ்க்கையே சாரமற்றதாம்.

மோ. ஆமாம் மிகவும் உண்மைதான், எனக்கு சட்னி என்றால் மிகவும் பிரியம். .

தா. (மிஸ் மோஹரிடம்) சரி-நீ போவதன்முன் நா ன் உன்னை மறுபடியும் பார்க்கக்கூடுமா ?


கு. அது கூடவே கூடாது -என்ன அப்பா தாமு, இந்த அம்மாளே திருச்சூழியைவிட்டு அவ்வளவு சுலபமா கப்போக விடுகிறாயே? திருச்சூழியில் இந்த அம்மாள் தான், இந்திய சமூகத்திற்கும், ஆங்கில சமூகத்திற்கும் உயிர்நிலை போன்றவர்கள் ; ஸ்திரீகளில் இவர்களிலும் மிஞ்சிய கற்றறிந்தவர்கள் இல்லையே.


மோ. இந்த உபன்யாசத்தின் முடிவில் நான் விடைபெற் றுக்கொள்ள வேண்டியதுதான் பாக்கி.


கு. அது ஒருகாலும் கூடாது-நான் நாளைக்கே இதை ஆட்சேபிப்பதற்காக, மைதானத்தில் ஒரு பெருங்கூட்டம் கூட்டி


மோ.அது மிகவும் சிறப்பான ஓர் யோசனை -இதற்குள் ளாக நான் போய் விடுகிறேன்.


தா. நீ கடைசியாகத் தீர்மானிப்பதன் முன், இன்னொரு முறை யோசித்துப் பார்த்தால் நலமெனத் தோன்று கிறதெனக்கு.


கு.உங்களுக்கிடையில் நான் வருவது நியாய மல்லவினி. நான் போய் வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/22&oldid=1413876" இலிருந்து மீள்விக்கப்பட்டது