பக்கம்:மனை ஆட்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22


22 தா. இந்த சாகசமெல்லாம் எதற்காக? நீங்கள் வேண்டுவ தென்ன ?


பா. எங்களுக்கு ஒன்றும் வேண்டாம்! சக்கு, நமக்கு ஏதா வது வேண்டியிருக்கிறதா ?


ச. வேண்டியது ஒன்றுமே இல்லை அம்மா.


தா.சரி, நாளைக்கு உனக்கு அந்த ரவை அட்டிகையை வாங்கிக் தருகிறேன், எழுந்திருந்து ஏதாவது சாப்பி டுங்கள். நாளைகாலை என் வீட்டில் இரண்டு பிரேதங் கள் விழுந்திருக்க வேண்டாம் உ ல எக ல் லா ம் என்னைப் பழிக்க வேண்டாம்.


பா. (கொஞ்சம் எழுந்திருந்து) உங்கள் ரவை அட்டிகை யாருக்கு வேண்டும் இனிமேல் ?


தா. நிரம்ப சரி ! இப்படி நீங்கள் எல்லாம் ஒரே பிடிவாத மாயிருந்தால், நான் என்ன செய்யக்கூடும்? மடை யர்களை அறிந்து கொள்வதற்கு அவர்கள் பிடிவா தம்தான் முக்கிய அறிகுறியாகும். நான் போய் அந்த ர வை அ ட் டி ைக வேண்டாமென்று சொ ல் லி விடுகிறேன்.


பா. அடம் பிடித்தல்தான் உத்தமர்களான ஆடவர்களுக் கும் பெண்மணிகளுக்கும் அலங்காரம்.


தா. சும்மா அடம்பிடிக்க இஷ்டமா அல்லது அ ழ கி ய அட்டிகையை அணிய இஷ்டமா, என்று சிக்கிரம் உன் மனதில் தீர்மானம் செய்.-சீக்கிரம் !


பா. ஆண் மக்களுக்கெல்லாம், எப்பொழுதும், எல்லாம் அதிக அவசரம்தான்-தற்கால நாகரீகத்தைப்போல்!

தா. நீ பார், நாங்கள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது, நாங்கள் படுத்துக்கொண்டு போர் வையைப் போர்த்திக் கொண்டிருக்க முடியாது.கடைசியில் தூக்கிக்கொண்டு போகிறார்களே அந்த காலம் வரும் வரையில். இப்பொழுது நான் சொல்வ தைக்கேள், நான் மூன்று எண்ணுவதற்குள் நீ எழுந் திருக்கா விட்டால், அந்த ரவை அட்டிகை எப்பொழு தும் நம்முடைய வீட்டை எட்டிப் பார்க்காது; நீ இப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/26&oldid=1415110" இலிருந்து மீள்விக்கப்பட்டது