பக்கம்:மனை ஆட்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23


23 டியே பட்டினியிருந்து செத்துக்கொணடே யிருக்கலாம் எப்பொழுதும் என்வரையில்-ஒன்று-இரண்டு


பா. (பெருமூச்சு விட்டுக்கொண்டும், மிகுந்த கஷ்டத்துடன் எழுந்திருப்பதுபோல் மெல்ல எழுந்து) இந்த ஆடவர் கள் தான் என்ன கொடுமையான பிடிவாதக்காரர் களா யிருக்கிறார்கள் !


தா. அதெலலாம் பழய காலத்தில் கற்காலம், கொடுமை யான பிடிவாதக் காரர்களாயிருப்பது உங்களுடைய முறையாகும் -எழுந்து ஏதாவது சாப்பிடுகிறாயா ?


பா. வயிறு எரியும்போது சாப்பாடு வேண்டி யிருக்குமோ யாருக்காவது ?


தூ. ஏன் ? இன்னும் எதற்காக வயிற்றெரிச்சல் ? பா. ஒரு மனுஷியாகவும், மனைவியாகவும் நடத்தாமல், என்னை-என்னை, -உங்கள் வேலைக்காரியைப்போல் -நடத்துகிறீர்களே -அதற்காக- (தேம்பி அழுகிறாள்)

தா. உன்னை யார் அப் டி அடிமையாக பாவிப்பது ?


பா. யாரா? கலியாண காலத்தில் ஓமாக்னியின் முன்பாக என்னைத் தன் ராணியாகப் பாவிப்பதாகச் சத்தியஞ் செய்து கொடுத்தவர் !


தா. அது சரிதான் -நீ ராணியாயிருக்க முடியுமா, நான் ராஜாவாக இல்லா விட்டால் ?

பா. கணவர்கள் எல்லாம் எப்போதும் ராஜாக்கள்தான்.-- குரூரமான கொடுங்கோல் அரசர்கள்!

தா. ஆமாம் என்றால் நீ கூறுவது மிகவும் உண்மையெனத் தோன்றுகிறது. 1918-ம் ஆண்டில் முடிந்த பெரிய யுத்தத்திற்குப் பிறகு, .ஜெர் ம னி அரசர் இருந்த ஸ்திதியில்தான் நான் இருப்பதாக நினைக்க ஆரம்பிக் கிறேன்.- துரதிர்ஷ்டம் பிடித்த ராஜா ! - இன்னும் என்ன என் ராணியே ?

பா. ஹூம் - நல்ல ராணிதான் ! ஒரு பைசாவுக்குக் கூட பிச்சை யெடுக்க வேண்டியவள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/27&oldid=1415111" இலிருந்து மீள்விக்கப்பட்டது