பக்கம்:மனை ஆட்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25


25

தா. உன்னை மனைவியாகப் பாவிப்பதென்றால்-அதாவது -மாசம் முதல்தேதி என் சம்பளம் முழுவதையும் உன்னிடம் ஒப்புவித்து விடவேண்டு மென் கிறாய்?

பா. ஏன் அப்படிச் செய்யக்கூடாது? எனக்கு, அப்பா, அம்மா, அண்ணன் தம்பி, உடன்பிறந்தார் யாராவது இருக்கிறார்களா என்ன, அப்பணத்தை யெ ல் லா ம் அவர்களுக்குக் கொடுத்துவிட ?

தா. அவர்கள் இல்லைதான் டாக்கர் அண்டு சன்ஸ் -ஆர் அண்டு சன்ஸ்-கொட்டடியா முதலியவர்கள் எத்தனை பெயர் இருக்கிறார்கள் !

பா. அப்படித்தான் செலவழித்தால் எ ன் ன கெட்டுப் போகிறது ? நகையாகப் பண்ணிப் போட்டால் பணம் எப்பொழுதும் செலவழிந்து போகாது, பாழாய்ப் போகாது பாங்கியி லிருப்பதைவிட க்ஷேமமாயிருக் கும். வர வர அவைகளின் விலை இ ர ண் டு பங்கு, மூன்று பங்கு, நான்கு பங்கு, உயர்ந்து கொண்டே போகாதா?


தா. உன்னை இந்த கணமே கவர்ன்மென்டார் கஜானா மந்திரி யாக்கிவிட வேண்டுமென்று எண்ணுகிறேன் ! கவர்னர் அவர்களுக்கு இந்த யோசனை ஏன் தோன்ற வில்லை யென்று நான் ஆச்சரியப்படுகிறேன்.

பா. (மறுபடியும் படுத்துக்கொண்டு) இந்தக் குறும்புக ளெல்லாம் போதும் ! பேதைகளாகிய எங்களுக்கும் ஒரு காலம் வரும் !கொஞ்சம் பொறுங்கள் !

தா. இப்பொழுதே உங்களுக்கும் காலம் வந்திருக்கிறதே!பார்வதி-நீ தா ேன இப்பொழுது . ஜெ யி த் து வருகிறாய் !-எழுந்திரு.


பா. இல்லை-நான் மாட்டேன்!

தா. நீ கேட்பதை யெல்லாம், ஏறக்குறைய, கொடுப்பதாக, நான் வாக்குக் கொடுத்தால்கூடவா ?

பா.ஏறக்குறைய!-என்றால் அதற்கர்த்த மென்ன ?

தா. என் சம்பளத்தில் மாசம் மாசம், உனக்கு நான் பாதி கொடுப்பதாக எண்ணிக்கொள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/29&oldid=1415114" இலிருந்து மீள்விக்கப்பட்டது