பக்கம்:மனை ஆட்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28


28

ச. அம்மா !—

தா. ஓ! தெரிகிறது! இப்படித்தான் பட்டினி யிருந் தீர்களோ ஐயோ பாவம் பார்வதி, சகுந்தலா!சாப்பாடும் பலஹாரமும் ! (பி ல் லை வாங்கிப் பார்த்து) நாலரை ரூபாய் செவ்வாய்கிழமை-ஐந்தரை ரூபாய் புதன்கிழமை- இன்றைக்கு ஏழரை ரூபாய் !


பா. (நிமிர்ந்து எழுந்திருந்து) ஆமாம், நாங்கள் சாப்பிட் டோம் சாப்பிடாமல் ப ட் டி னி கிடந்தோமென்று பார்த்தீர்களா ? நாங்கள் என்ன அப்படிப்பட்ட புத்தி யில்லாதவர்களா என்ன ?


தா. அப்பொழுது, நீங்கள் சாப்பிட்டுக்கொண்டிராத கால மெல்லாம், பட்டினி யிருந்தீர்கள் -என்று நினைக் கிறேன்.


பா. சந்தேகமென்ன ? யாரை வேண்டு .மெ ன் றா லு ம் கேட்டுப் பாருங்கள் ! ஒவ்வொரு நாளும், இருபத்து நான்கு மணியில், இருபத்தோரு மணி ஒன்றும் புசிக் கவேயில்லை. பட்டினிதான் கிடந்தோம்,-சில சமயங் களில் இன்னும் அதிக நேரம் !


தா. ஐயோ பாவம் ! என் கண்மணிகளே எப்படி சகித் தீர்கள் இந்த கஷ்டத்தை ?-அடே பையா, கணபதி பணத்துடன் ஓடிப்போய் விட்டதாகக் கேள்விப்படு கிறேன். உனக்கு அந்தப்பணம் தேவையா யிருந் தால் அவன் பி ன் னா ல் ஓடிப்போய்ப் பார் ; அவன் இன்னும் அதிக தூரம் போயிருக்க ம ட் டா ன் நான் என்னவோ ஒரு பைசாவாவது கொடுப்பேன் என்று எதிர் பார்க்க வேண்டாம் நீ.


ம. எனக்கென்ன வந்தது ? நான் போய் என் எசமானி டம் சொல்லி விடுகிறேன். அவர் அந்த பணத்தைப் பெறுவதற்கு என்ன பாடாவது படட்டும், அ ல் ல து போலீஸ்காரனை, பாடுபடச் செய்யட்டும். (போகிறான்)


தா. இப்பொழுது- துரைசானிகளே ! சமயற்காரன் என் னவோ, உ ங் க ளு க் கு உபயோகப்பட மாட்டான் -டும்கி கொடுத்துவிட்டுப் போய்விட்டான் ! உங்களுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/32&oldid=1415119" இலிருந்து மீள்விக்கப்பட்டது