பக்கம்:மனை ஆட்சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 மனை ஆட்சி


ஒரு அங்க நாடகம்


முதல் காட்சி


இடம்-திருச்சிராப்பள்ளியில் உயர்தர உபாத்தியாயர் தாமோதர சாஸ்திரியார் வீட்டில் ஒரு பெரிய அறை.


காலம்-சாயங்காலம்.


அறைக்கு மூன்று வாயில்கள் இருக்கின்றன. ஒன்று பின்பக்கமாகவும், மற்ற இரண்டும் இரண்டுபுறத்திலும் அறையில் சில படங்கள் இருக்கின்றன, சில முடிந்ததும் சில அறைகுறையாகவும் படங்களுக்கு வர்ணம் தீட்டும் சாமான்கள் முதலியன ஆங்காங்கு கிடக்கின்றன.பார்வதியும் சகுந்தலாவும் நாற்காலிகளின் மீது உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். -


பா . சரியும்-தப்பும் ! நீ ரொம்ப தெரிந்தவள் ! நீ பேசுவதெல்லாம் எனக்கு வேடிக்கையா யிருக்கிறதடி. அந்தக் காலமெல்லாம் அப்பொழுதே மலையேறிப் போய் விட்டது. தற்காலம் உன் காரியம் ஆகிறதற்கு என்ன உபயோகமா யிருக்கிறதோ அதுதான் சரி, அதற்கு எது எடஞ்சலா யிருக்கிறதோ அது தப்பு.


ச. அம்மா! இதென்ன விபரீதம் !


பா. ஆமாம், நான் சொல்வதெல்லாம் உனக்கு விபரீதம், உன் தகப்பனார் செய்வதெல்லாம் நிரம்பசரி, அப்பட்டம் நியாயம் !


ச. நான் அப்படிச் சொல்லவில்லையே அம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/5&oldid=1415118" இலிருந்து மீள்விக்கப்பட்டது