பக்கம்:மனை ஆட்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பா.உன் மனதிலிருக்கிறது எனக்குத் தெரியாதா என்ன? உங்கப்பா பெண் ஆச்சுதே நீ! -என் பெண் அல்ல, என் வயிற்றில் பிறந்த கோடாலிக் காம்பாச்சே!

ச.இனி நான் ஒன்றும் பேசவில்லையம்மா, நான் வாயைத் திறக்கவில்லை. நான் பேசினால்தானே இந்த சண்டை யெல்லாம்?

பா.வாயை மூடிக்கொண்டிருக்கிற பெண்ணை மாத்திரம் எப்பொழுதும் நம்பக்கூடாது, அவள் வயிற்றுக்குள்ளே எப்பொழுதும் புகைந்து கொண்டேயிருக்கும் நெருப்பு!

ச.எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிற பெண் பிள்ளையோ?

பா.அதோ அதோ! மறுபடியும் பார்!

(அம்மாயி வருகிறாள்.)

என்ன சமாச்சாரம் அம்மாயி?

அ.அஞ்சரெமணி ஆவுதம்மா, ஐயர் வீட்டுக்கு வர்ற நேரமாச்சி.

பா.அந்த தடிக்கழுதை கணபதி எங்கே? பரமானந்த பவன் ஓட்டலுக்கு அனுப்பினேனே, அவன் இன்னும் திரும்பி வரவில்லையா ? . . . .

அ.அவன் ஏன் சீக்கிரம் வர்றான் அங்கேயிருக்கிற பலஹாரங்களையெல்லாம் அவன் ருசி பார்த்தாக வேணாமா ?

பா.உடனே வெளியே போய் அவன் திரும்பி வருகிறானா பார். கதவண்டை நின்று எசமான் திரும்பி வந்தால் எங்களுக்குச் சொல்.

அ.எசமானும் கணபதியும் ரெண்டுபேரும் ஒண்ணா வந்தா?

பா.இராது-அப்படி வரமாட்டார்கள், கணபதி அப்படிப்பட்ட மடக்கழுதையல்ல.

அ.அம்மாதான் சொன்னைங்களே கொஞ்ச முன்னெ அவன் தடிக்கழுதெ இண்ணு. -நான் என்ன செய்யறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/6&oldid=1415144" இலிருந்து மீள்விக்கப்பட்டது