பக்கம்:மனை ஆட்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4


4 ச.அப்படி ஆளும்போது நீங்கள் வெளியேபோய் சம்பா தித்துக்கொண்டு வரவேண்டுமோ ? அப்பொழுது அப்பா என்ன செய்யவேண்டும் ?

பா.ஹா ஹா' ஒன்றும் தெரியாத முட்டாள் பெண்ணே ! இது தெரியாதா உனக்கு? நான் ஏன் வெளியே போய் சம்பாதிக்க வேண்டும்? அவர் வழக்கம்போல் கஷ்டப் பட்டு வேலைசெய்து சம்பாதித்துக் கொண்டு வருவார். அவர் சம்பளம் வந்ததும் - மாசம் முதல் தேதியில் - அந்த பணத்தை குரியாக - மரியாதையாக - ஒரு காசும் குறையாமல் என்னிடம் ஒப்பித்து விடுவார். இதோ பார், இதுதான் மனையாட்சி என்று பெயர் - மனைவி மனையில் ஆளுகிறது மனைவி என்று அதற்கா கத்தான் பெயரிட்டார்கள் எனக்கு. ஆகவே என் மனையை நான் ஆளுகிறேன். பணத்தை யெல்லாம் வாங்கிக்கொண்டு, வைத்துக் கொண்டு செலவழிப்பேன் நிரம்ப புத்திசாலித்தனமாய் !

ச.அதற்கென்ன சந்தேகம்-நிரம்ப புத்திசாலித்தனமாய் ஆனால் பாவம் ! அப்பா கதி என்ன ஆவது

பா.ஏன்? அவருக்கென்ன ? இப்பொழுது ஆளக்கற்றவர் அப்பொழுது ஆளப்படுவதற்குக் கற்றுக்கொள்வார். மனையாட்சி என்றால் எல்லாம் தலைகீழாக மாறவேண் டாமா இப்பொழுது, நான் ஏதாவது ஒரு அழகிய பொம்மை வாங்கவேண்டு மென்றிருந்தால், உன் தகப் பனாரை அகற்காக ஐந்து ரூபாயைக் கேட்கிறேன். அவர் முகத்தைச் சுளித்து, தன்கையில் பணமில்லை யென்று கூச்சல்போட்டு, கொடுக்க முடியாதென்று மறுத்து விடுகிறார். அப்பொழுதோ, என் கையில் எல்லாப்பணமும் வந்தபிறகு, அவர் தன் கிளப் (Club) பின் மாத சந்தாவுக்காக மூன்று ரூபாயை என்னிடம் வந்து கெஞ்சிக் கேட்பார், அப்பொழுது நான் முகத்தைச் சுளித்து, கிளப்புக்காக வீண் சிலவு செய்வ தற்கு, என்னிடம் பணமில்லையென்று, நான் கத்தி, கொடுக்க முடியாதென்று மறுத்து விடுவேன். இந்த யோசனை எப்படி தோன்றுகிறது உனக்கு? நிரம்ப அழகான யோசனை -அம்மா !

ச.நிரம்ப -அழகு! -அம்மா! -அழகான யோசனைகளைப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/8&oldid=1412980" இலிருந்து மீள்விக்கப்பட்டது