பக்கம்:மனோகரா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

απ :

மனோஹரன் (அங்கம்-3

நொடியே நான் வசந்தசேனையைக் கொன்று பழி

வாங்குகிறேன்!-அம்மணி, என்ன நான் கேட்பதற்குப்

பதில் கூறாதிருக்கிறீர்கள்?

அம்மணி, இனி தாங்கள் உத்தரவளிக்கத் தாமதிக்க லாகாது! தாங்கள் ஒன்றிற்கும் அஞ்சவேண்டாம். வசந்தசேனை இறப்பாளாயின் மஹாராஜாவைப் பிடித் திருக்கும் சனி ஒழியும்; அவர் முன்போலாகிவிடுவார். வசந்தசேனையிறந்தால் நமக்கு மாத்திரமல்ல, இந்நகர வாசிகளுக்கெல்லாம் சுபமாகும். எப்படியாவது தாங்கள் பரோபகாரத்தையெண்ணியாவது இந்த உத்தரவளிக்க வேண்டும்,

ஆமாம், மாமி! வசந்தசேனை செத்தால்தான் நல்லது: என்னையும் பிராணநாதரையும், உம்மையும் என்ன என்ன வைதாள் அன்றைத்தினம்!

அம்மணி, ஒரு விதத்தில் இது நல்ல யோசனையென்றே தோன்றுகிறதெனக்கு, எப்படியும்

சத்தியசீலரே! என்ன நீரும் இவர்களுடன் சேர்ந்தீர்? மனோஹரா, நீ கூறியதெல்லாம் உண்மையே. வசந்த சேனைதான் ஒருவேளை இதற்கெல்லாம காரணமா யிருந்தாலுமிருக்கலாம். ஆயினும் நான் பழிவாங்குகிற விஷயத்தைப்பற்றி யோசிக்குமுன், மஹாராஜா என்ன காரணத்தைக் குறித்திவ்வாறு கட்டளையிட்டாரென்று விசாரித்தறியவேண்டும்

அம்மணி, இதென்ன மறுப்டியும் பழையகதை ஆரம்பிக் கிறீர்களே? இன்னும் நியாயங்கேட்பதென்ன அவரை? நான் சாகவேண்டிய நியாயந்தான்! வேறென்ன. வேண்டும்? இந்த நியாயம் தங்களுக்குச் சம்மதிதானோ?

பிராணநாதா, தாம் இப்பொழுது இறப்பதில்லை யென்று எனக்கு வாக்களித்திருக்கிறீர்கள், மறவாதீர்!

அம்மணி, இது உமக்கே நியாயமாகத் தோற்றுகிறதா? இனி என்னால் சும்மாவிருக்கமுடியாது! ஒரு வார்த்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/107&oldid=613505" இலிருந்து மீள்விக்கப்பட்டது