பக்கம்:மனோகரா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத் :

Η τ :

பத் :

மனோஹரன் (அங்கம்-1

அநுபல்லவி

தன்னேரில்லா தயாளவீரா தானவர் பணியும் குரா (ம)

சரனம்

தஞ்சமென் றுனை தாவியடைந்தாரை அஞ்சலெனவே நீ ஆதரிப்பாயே

பஞ்சையர் மீதும் பாவையர் மீதும் பாணத்தை நீ என்றும் எய்யாதே. (ம)

ஆயினும் ஒன்று கூறுகிறேன். உடலபிமானம், உயிரபி மானம், உறவபிமானம் இம்மூன்றையும் நீத்துப் போர் புரியும் அமர்க்களத்தில், மானாபிமானமொன்றை ம்ாத்திரம் மறவாதே; என்ன இடுக்கண் வந்து தேர்ந்த போதிலும் அதர்ம யுத்தம் புரியாதே பகைவரை வஞ் சித்துக் கொல்லாதே, உன் ஜன்ம (விரோதியா) யிருந்த போதிலும் அமர்க்களத்தில் நிராயுதனாய் நின்றவன் மீதும், உன்னைத் தஞ்சமென்றடைந்தவன்மீதும்: உனது பனத்தைச் செலுத்தாதே. அப்படிப்பட்டவர்களை உன் உயிரையாவது கொடுத்துக் காப்பாற்று

|ஒரு புறமாக ராஜப்பிரியனுக்குi என்ன மனவுறுதி! என்ன மனவுறுதி!

(ஒரு புறமாக சத்தியசீலருக்கு! அதிவீரசேரனுடைய மகளென்பதை மறந்திரே !

அம்மா, அப்படியே ஆகட்டும்.இச்சிறந்த உடைவாளேது?

உன்னிடம் கொடுப்பதற்கே இதை எடுத்து வைத்தேன் இன்றைத்தினம். இது யாருடையது தெரியுமா உனக்கு? இது என் தந்தையாகிய அதிவீரசேர மஹாராஜ னுடையது. அவர் முத்துவிஜயபாண்டியனது குதால், தனது நாடு நகரமெல்லாம் இழந்து தெய்வாதீனத்தால் இறக்கும்படி நேரிட்டபொழுது, தன்னால் தன் பகையை முடிக்கக் கெடுத்துவைக்காமற். போனபோதிலும், தன் ,ே காயை உன்னாலாவது தன் சபதம் முடியவேண்டு இதன் கரு நீ குழந்தையாய் இருந்தபொழுது இவ் வானை என்னிடங் கொடுத்து உனக்கு வயது வந்தவுடன் இதை உன்னிடம் ஒப்புவிக்கும்படி கூறினார். கண்ண்ே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/11&oldid=613246" இலிருந்து மீள்விக்கப்பட்டது