பக்கம்:மனோகரா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி-4) மனோஹரன் 103

եվ

ger :

கொண்டு வரும்படி கட்டளையிடலாகாதா? மஹா ராஜா, அவரையார் கட்டுவது? எப்படி கட்டுவது? மனோஹரரை இன்னாரென்று மறந்தீரோ? மஹா ராஜா, தங்களிடம் ஒன்றையும் எனக்கு ஒளிக்க இஷ்ட மில்லை. தாங்கள் முன்பிட்ட கட்டளையைக் கேட்ட பொழுதே எல்லோரையும் அரை நொடியில் அதமாக்கியிருப்பார் ஆயினும் தந்தையாயிற்றேயென்று பார்க் கிறார்போலிருக்கிறது: நாங் க ள் கூறச் சற்றுக் கோபத்தையடக்கிக்கொண்டிருக்கிறார், இல்லாவிடில் இக்காவலாளிகள் தடுக்கவோ அவர் நின்றுவிடுவார்? அவர்கள் ராஜ கட்டளையென்று காலில்விழுந்து வேண்ட, பச்சாத்தாபப்பட்டு, அவர்கள்மீது குற்ற மில்லையென்று கண்டு, உலகமரியாதைக்காக என்னை யனுப்பித் தம்மைக் கேட்டுவரச் சொன்னார்.

ராஜப்பிரியா, இதையெல்லாம் நீ எனக்குக் கூற

வேண்டியதில்லை. அவன் என்னைப் பார்க்கவேண்டு மென்ருல் அவ்விதம் வந்தாலொழிய நான் பா ரேனென்று சொல், போ! .

உத்தரவுபடி, மஹாராஜா, நான் சொல்ல வேண்டிய தைச் சொல்லிவிட்டேன். பிறகு தங்களுடைய இஷ்டம். அவரிடம் சென்று இதைச் சொல்கிறேன். இதனா லுண்டாகும் நன்மை தீமை தம்மையே சேரும்!

(போகிறான்)

ஒரு மந்திரி : மஹாராஜா மனோஹரர் இ ன் ன குற்றஞ்

செய்தாரென்று நாங்களெல்லோரும் அறிய விரும்பு கிறோம். என்ன காரணம்பற்றித் தாங்களிள்வாறான கட்டளையிடும்படி நேரிட்டதோ அதை நாங்கள் தெரிந்துகொள்ளும்படி அனுக்கிரகிக்கவேண்டும்.

அக்காரணத்தை உங்களுக்குக் கூற எனக்கிஷ்டமில்லை.

மஹாராஜாவின் சித்தம்; மஹாராஜா, அவ்வாறே மனோஹரர் பெருங் குற்றஞ் செய்ததாயிருந்தபோதி லும், கருணைக் கடலாகிய தாம் அதை மன்னித்து, எங்களெல்லோரையும் சந்தோஷிப்பிக்கச் செய்வீர் களென்று மிகவும் பிரார்த்திக்கிறோம். எப்படியிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/112&oldid=613515" இலிருந்து மீள்விக்கப்பட்டது