பக்கம்:மனோகரா.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iO 5

மனோஹரன் |அங்கம்-8

யெனச் சீறி இப்பொழுதே இப்பட்டண முழுவதையும் பொடிப்படுத்தி விடுகிறேனெனக் கூறினர்! நாங்கள் அருகிலிருந்து கோபத்தைச் சற்றுத்தனித்து, மஹா ராஜாவின் கட்டளைப்படி நடப்பதில் இழிவொன்று மில்லையென்று கூறவே, உடன்பட்டுத்தானாகத் தனது கையினால், தளைகளையெடுத்துப் பூட்டிக்கொண்டார். நமது சேவகர்கள் அவரருகிற் செல்லவும் பயப்படுகிறார் கள். இப்படி தமது சொல்லுக்குடன்பட்டுவரும் அவரை மறுபடியும் இங்கு உள்ளே வாலாகாதெனக் கட்டளை யிட்டீராமே! ஐயனே! இனி யோசிப்பதற்கு நேர மில்லை. ஐயனே! மிஞ்சிவிடும்! உடனே சேவகர்களுக்கு அவரை உள்ளே விடும்படி கட்டளையிடாவிட்டால் இந்த அரண்மனை அதமாய்விடும் அரை நொடியில் என்பதற்குச் சந்தேகமில்லை! மஹாராஜா, இனி தாமதிக்கலாகாது!- - .

எல்லோரும் : (நின்று) ஆம்! ஆம்! மஹாராஜா உடனே

கட்டளையிடும்!

(உள்ளே இருந்து ஆஹா! யார் அவன் என்னை உள்ளே விடேன் என்கிறது?

எல்லோரும் : வந்துவிட்டார் வந்துவிட்டார்!

(கொலுவில் குழப்பமுண்டாகிறது.)

இரும்புச் சங்கிலிகளால் தன்னைக் கட்டிப் பிடித்திருக்கும் ஆறு சேவர்களையும் அப்படியே இழுத்துக்கொண்டு மனோஹரன்.

கோலாகலமாய் விரைந்து நுழைகிறான், ராஜப்பிரியன் சற்று பின்னால் வருகிறான்.

பத்மாவதி யாவருமறியாதபடி பின்னால் வந்து

ஒரு புறமாக முக்காடிட்டு நிற்கிறாள்.

தந்தையே! நான் விலங்கிற் பூட்டப்பட்டாலன்றி

என்னைக்காணமாட்டேனென்றது உண்மைதானா? இப் பொழுது இங்கிருக்கும் காவலாளர்க்கு என்னை உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/115&oldid=613521" இலிருந்து மீள்விக்கப்பட்டது