பக்கம்:மனோகரா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்சி.4 மனோஹரன் . 1.07

விடிலாகாது என்று நீர் கட்டளையிட்டது. உண்மை தான?-ஏன் தலை குனிந்து ெ காள்ளுகிறீர்கள்? நேராக என்னைப் பாரும்! அவைகளெல்லாம் போனாற் போகட்டும். என்னை என்ன காரணம் பற்றிக் கொல் லும்படியாகச் சத்தியசிலருக்குக் கட்டளையிட்டீர்? நான் என்ன குற்றஞ்செய்தேன்? என்னைக் கொல்லா விட்டால், இன்று சாயங்காலத்திற்குள்ளாக சத்திய சீலரைச் சிரச்சேதஞ் செய்வதாக எழுதிக்கொடுத்திரே, என்ன காரணம்பற்றி? அவரும் என்ன தவறு செய்தார்? -என்ன நான் கேட்பதற்கொன்றும் கூறாது தலை வணங்கியிருக்கிறீர்-தந்தையே! நான் இதுவரையில் என் தாயாருக்கும் எனக்கும் செய்துவந்த தீமைகளை யெல்லாம் எவ்வளவோ பொறுத்தேன்! இனி நான் பொறுக்கமாட்டேன்! இதற்கு நியாயம் எடுத்துரைக் கிறீரா என்ன? தந்தையாயிற்றே என்று இவ்வளவு காலம் அந்த வசந்தசேனையின்பொருட்டு தாம் எங் களுக்கிழைத்த துன்பங்களையெல்லாம் பொறுத்தேன்! இதோ கடைசி முறை சொல்லுகிறேன்! இனி பொறுக்க மாட்டேன்!-என்ன நியாயங் கூறுகிறீர்? ஏன் சும்மா இருக்கிறீர்?-இதுவோ உம்முடைய செங்கோன் முறைமை? யார் உமக்கு இந்நீதி கற்பித்தது? வசந்த சேனையோ? அண்ணா! ஒரு அற்பப் பெண் வலையிலகப் பட்டுத் தாம் இவ்வாறு நியாயமெல்லாம் தப்பி நடக்க லாமோ? காரணங் கூறாது ஒருவனைக் கொல்லும்படி கட்டளையிட உமக்கு எந்தத் தர்ம சாஸ்திரத்திற் கூறி யிருக்கிறது? சோழ நாட்டிற் கதிபதியாகிய தாமே இவ்வாறு தர்மந் தவறி நடந்தால் உமது பிரஜைகளெல் லாம் சன்மார்க்க வழியில் எவ்வாறு நடப்பார்கள்? உமது பிரஜைகளே உம்மை இழிவாக மதியார்களோ உமது பகைவர்களெல்லர்ம் உம்மைப் பழியார்களோ? என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கு நியாயமாவது கூறும் -அல்லது அக்கட்டளையையாவது மீட்டுக்கொள்ளும், என்னுயிருக்காக நான் அஞ்சவில்லை. என்னுயிரைப் போக்க எவன் சக்த்னோ'அவன் வந்து அதைக் கொண்டு போகட்டும். ஆயினும் இந்த அநீதி நம்து ராஜ்யத்தில் நடந்தால், நமது வம்சத்திற்கே இழிவாயிற்றென்றே நான் யோசிக்கிறேன். உமது மைந்தனாயிற்றே நான் என்று கேட்க வரவில்லை; யாராயிருந்தாலுமென்ன? நியாயம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்.-என்ன காரணம்பற்றி என்னைக் கெர்ல்லும்படி கட்டளையிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/116&oldid=613523" இலிருந்து மீள்விக்கப்பட்டது