பக்கம்:மனோகரா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(காட்சி-4 மனோஹரன் 109

புருஷோத்தம ராஜனே! என்ன யோசிக்கிறீர்? எடுத்துக் கொள்ளும் உமது வாளை. மனோஹரனுடைய புய வலிமையை இன்றே காண்பீர்! நிராயுதனாயிருக்கும் உம்மைக் கொல்வது நியாயமன்று-எடும் வாளை! அல்லது தாம் கூறியது. தவறென்று என்னை மன்னிப்புக் கேளும்! இனி ஒரு நொடியேனும் சும்மா இருப்பீராயின், தர்மத்தையும் பாராமல் என்னைத் துற்றிய தலையை வெட்டியெறிவேன்.1-ஆஹா, வசந்தசேனை! நீயும் பக்கத்திலிருக்கிறாயா? உங்களிருவரையும் ஒரே வெட் # - so & வெட்டியெறிகிறேனிதோ!-புருஷோத்தம ராஜனே! காத்துக்கொள்ளும் உமது தலையைச் செளரிய

மிருந்தால்!

(சிம்மாதனத்தின்மீது பாய்ந்து வாளை யோங்குகிறான். சபையோருக்குள் பெருங் குழப்பமும் ஆரவாரமுமுண்டாகிறது1.

மறைந்திருந்த பத்மாவதி வேகமாய் வருகிறாள்.

(மனோஹரன் கரத்தைப் பிடித்துக் கொள்ளுகிறாள்.

முக்காடு நழுவி முகம் விளங்குகிறது. மனோஹரா நில்! விடு வாளை!

எல்லோரும் : பத்மாவதிதேவி! பத்மாவதிதேவி!

tù #

அம்மா! இங்கெங்கு வந்தீர்கள்? அங்கல்லவோ இருந்தீர் களென்று பார்த்தேன்! இங்கே ஏது வந்தது?

அதெல்லாமிருக்கட்டும், விடு வாளை! நீ எனக்குவாக் களித்ததென்ன, இப்பொழுது செய்யத் துணிந்ததென்ன? விடு!

அம்மணி இப்பொழுதென்னை மன்னிக்கவேண்டும். இவ்விருவரையுங் கொன்றே என் வாளை விடுவேன்!புருஷோத்தமராஜனே! எங்கே நழுவப் பார்க்கிறீர்? நீர்

உயர் குலத்திற் பிறந்த கத்திரியனாயிருந்தால் இருந்த

இடத்தை விட்டுப் பெயராது என்னுடைய வாளுக்கு பதில் சொல்லி விட்டுப் போம்!

மனோஹரா! என்ன, உன்னையும் மறந்து பேசுகிறாய்! விடு உடனே வாளை! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/118&oldid=613527" இலிருந்து மீள்விக்கப்பட்டது