பக்கம்:மனோகரா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

up

மனோஹரன் (அங்கம்-8

அம்மணி! சற்று முன்பாக மஹாராஜா கூறியதைக் கேட் டீரா நீர்? இந்த வேசியாகிய வசந்தசேனை கூறியதைத் தா மு. ம் நம்புகிறார்போலும்! . இதன்பொருட்டே என்னைக் கொல்லும்படி கட்டளையிட்டிருக்கவேண்டும்! அம்மணி. இவ்வார்த்தையை நான் செவியுறக் கேட்டும் சும்மாவிருப்பேனோ? இதோ இவர்களிருவரையும் நொடிப் பொழுதில் கொன்று, நமக்கு இவர்களிழைத்த தீங்கிற்கெல்லாம் பழி வாங்குகிறேன், இதோ, உமது கண்முன்பாகவே சற்று ஒதுங்கியிரும்! என் முன் நிற்க வேண்டாம்.

நீ இந்த வாளைக் கொடுத்துவிட்டுப் பின் சென்றா லல்லாமல் நான் இவ்விடத்தை விட்டுப் பெயரேன்!

அம்மணி சுத்தவீரனாகிய நானோ முன் வைத்த காலைப் பின் வாங்குவேன்; மானமாகிய ஆபரணத் தையே முதலாகக் கொண்ட நானோ என்னை இழி வாகப் பேசியவர்களைச் சும்மா விட்டுவிடுவேன்? அம்மா! என் கோபம் இப்பொழுது மூண்டெரிகிறது!. இப்பொழுதென்னைத் தடுக்கவேண்டாம்! இதோ இந்தப் புருஷோத்தமராஜனது நாவை வெட்டியெறிந்து, தலையைச் சேதித்து யமபுரத்துக்கனுப்புகிறேன்! ஒதுங் கும் சற்றே!

மனோஹரா! என் சொற்படி கேளாய் நீ? எனக்குச் செய்த வாக்குத்தத்தத்தை மறந்தனையோ?

அம்மா! அதையெல்லாமிப்பொழுது நான் யோசிக்க மாட்டேன். இப்பொழுது நீர் என்னைத் தடுப்பதில் பயனில்லை! ஒதுங்கியிரும் சற்றே.

மனோஹரா என் சொல்லைக் கேட்கம்ாட்டா : கேளேன். இப்பொழுது, மும்மூர்த்திகள் வந்து தடுத்த போதிலும், என் பகையை முடித்தே மறு வேலை பார்ப் பேன்:

நீ என் குமாரன் என்பது உண்மையானால் விடு வாளை

அம்மணி இதென்ன இது # .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/119&oldid=613529" இலிருந்து மீள்விக்கப்பட்டது