பக்கம்:மனோகரா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(காட்சி-4 மனோஹரன் 111

if :

மனோஹரா! உனக்கு என் சொற்படி நடக்க இஷ்ட மில்லாதிருக்குமாயின், முதலில் உன்னைப் பெற்ற தாயாகிய என்னைக் கொன்ற பிறகே நீ அங்கு செல் வாய்! உன்னைப்பெற்ற உதரத்தின் உதிரத்தில் உன் வாளைத்தோய்த்த பிறகே மஹாராஜாவிடம் அணுகு வாய்! அப்படி உனக்கிஷ்டமிருந்தால் இதோ நிற்கிறேன் நான் பெண்டால், உன்னை ஈன்ற பேதை என்னை முதலில் கொன்றுவிட்டு பிறகு ஒரு அடி யெடுத்து வைப்பாய் !-உம்! ஏன் யோசிக்கிறாய்?கொல் என்னை முன்பு இதற்குத்தானே உன்னைப்பத்து மாதம் சுமந்து வருந்திப் பெற்றேன் !

பாதத்தில் வீழ்ந்து கதறிப் புலம்பி அம்மணி அம்மணி என்ன வார்த்தை சொன்னீர்கள் ! ஐயோ! இதையும்

உமது வாயி:னின்றும் நான் கேட்கவேண்டுமா ? அம்மா !

என்னை உயிருடன் கொல்கிறீர்களே உமது மொழி யால் மஹாராஜா என்னைக் கொல்லப்பார்த்தார் நீர் என்னைக் கொன்றே தீர்த்து விடுகிறீர்கள் ஜயோ இந்தத்தர்ம சங்கடத்திற்கு நான் என் செய்வது? அம்மா ! இந்நிந்தையை தான் எவ்வாறு பொறுப்பேன்? ஒரு வார்த்தை சொல்லுமே, ஒரு நொடிப்பொழுது எனக்கு விடை யளியுமே! அ த ற் கு ள் இவர்களிருவரையுங் கொன்று என் மாணத்தைக் காப்பாற்றிக்கொள்ளு கிறேன்! அம்மணி! இந்த இழிவு உம்மையுங் தொடர்ந்த தன்றோ? அம்மா! அம்மா! சுத்த வீரனாகிய நான் இவ்வசையைக் கேட்டும் பழிவாங்கா தெவ்வாறு பொறுத் திருப்பேன்? அம்மணி! எனதுள்ளம் பதறுகிறதே! என் கை துடிக்கிறதே! செய் என்று ஒரு வார்த்தை சொல் லுமே இச்சோழ நாடு முழுவதும் தரையுடன் தரை யாக்கிவிடுகிறேன்! ஐயோ! வெற்றி வீரனாகிய மனோஹரன் இவ்வசையைக் காதாரக் கேட்டும் சும்மா பொறுத்துக்கொண்டிருந்துவிட்டான் என்று எல்லோரும் ஏளனம் செய்வார்கள் நாளை அம்மணி அம்மணி!

மனோஹரா! அப்படி ஒருகாலும் ஏளனம் செய்யமாட் டார்கள். மூவுலகையும் வெல்லும் வல்லமையுடைய மனோஹரன் தன் தாயார் சொற்படி நடந்தானெனப் புகழ்வார்கள்! மனோஹரா, இனி நான் பன்முறை உனக்குக் கூறமாட்டேன், நீ என் பிள்ளையென்பது உண்மையானால் எழுந்திரு உடனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/120&oldid=613531" இலிருந்து மீள்விக்கப்பட்டது