பக்கம்:மனோகரா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

tũ •

1.1 :

Ls} *

iß."

மனோஹரன் (அங்கம்-3

அம்மணி! (எழுந்திருக்கருன்.) என் சொற்படி நடக்கிறாயா, மாட்டாயா? நீ என் மகனா, அல்லவா?

என்ன உமது சொற்படி நடப்பது?

உனது வாளை இப்படிக்கொடு.

இதோ! (iசி எறிகிருன்)

மனோஹரா! உனக்கென்ன அவ்வளவு அவமரியாதை?

அம்மா, இப்பொழுதாவது ஒரு வார்த்தை சொல்லும், நிராயுதபாணியாய் இப்படி அவர் க. ஸ்ருவ ரை யும் கசக்கிப் பிழிந்துவிடுகிறேன்!

அதெல்லாமிருக்கட்டும்! என் சொற்படி கே ட் கின்றையா மாட்டியா?

தீர்ந்ததே, இன்னுமென்ன?

நீ மஹாராஜாவின் சொற்படி நடக்கவேண்டும்.

மஹாராஜாவின் சொற்படி நடப்பதாவது! அவர் சொற் படி நடப்பதென்றால் நான் இறக்க வேண்டியது தான்!

ஆம்! உன்னையிறக்கும் படியாகத்தான் சொல்லுகிறேன்: மஹாராஜா அவ்வாறு கூறிய பிறகு, நாமிவ்வுலகில் இருப்பது நியாயமன்று. அவர் சொற்படி நீ இறப்பாய்நானும் விஜயாவும் இதோ அக்கினிப் பிரவேசமாகி உன்னை வந்து சேர்கிருேம்-அஞ்சாதே !

அம்மணி ' என்னை இறக்கும்படியா சொல்லுகிறீர்கள்

ஆம். அம்மா ! உம்முடைய வாயால் இறந்துபோகும்படியா சொல்லுகிறீர்கள் ?

ஆம்.

ஆம்!-சரி, இனி உயிர் வாழ்வது நியாயமன்று!-சத்திய சீல்ரே ! என் பிரக்ஞை தப்பும் போலிருக்கிறது ! நான் மூர்ச்சையா யிருக்கும்பொழுதே என்னைக் கொன்று விடும். உமது கையால் : (மூர்ச்சையாகிருன்),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/121&oldid=613533" இலிருந்து மீள்விக்கப்பட்டது