பக்கம்:மனோகரா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மனோஹரன் காட்கி-5

சந்தேக்கி கொண்டேனே சி. இக் கற்பிற் கரசியோ எனக்கு துரோகம் நினைத்திருக்கக்கூடும் : நான் அவ்வாறு எண்ணியதே மஹா பாதகம் அதற் அாகவே நான் இவ்வண்ணம் தீராத் துயரம் அனுபவிக்க நேர்ந்தது போலும்! நான் எவ்வாறு இவ்விதம் சந்தேசங் கொண்டேனென்று எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது!ஆயினும், அந்த திருபங்கள்!-அதில் ஏதோ தவறு நடந் திருக்க வேண்டும். சந்தேகமில்லை! முகத்தைப் பார்க் கும்பொழுதே தெரியாதோ?-விநியே விதியே!-என் இவர்களின்னும் இங்கு வரவில்லை: வேறு எங்காவது சென்றார்களோ? அல்லது நாம் இடம் தவறி வந்து விட்டோமோ?-ஐயோ! அப்படியேதாவது ந - ந் து மனோஹரன் இறப்பானாயின்-மனோஹரன் என் மைந்தனென்பதற்குச் சற்றேனும் சந்தேகமில்லை. அவனுருவமும் என்னுருவமும் ஒரே அச்கில் வார்த்தது போலிருக்கிறதென எல்லோரும் புகழ்வார்களே! அதை யும் நான் எப்படித்தான் மறந்தேனோ?-இது தான் குறித்த இடமென்பதற்குச் சந்தேகமில்லை. இருளில் எனக்கொன்றும் தெரியவில்லை; எப்படியும் நான் மனோஹரனுயிரைக் காப்பாற்ற வேண்டும் ஐயோ! நான் மஹாராஜாவாயிருந்தும் நேரிற் சென்று இதைக் கூற மனவுறுதி இன்றி, இவ்வேடத் தரித்து, ஒற்றனைப் போல் என் மைந்தன் முன்னே நான் செல்லும்படி நேரிட்டதல்லவா? ஆம், ஆம்! மனோஹரன் முகத்தை தான் இவ்வளவு தூரம் எல்லாம் நடந்துவிட்ட பிறகு, எப்படி ஏற் நோக்குவது? அதோ வருகிறார்கள் ஆவர். கள்தான்போல் தோற்றுகிறது-மனோஹரனும் சக்திய சல்லுந்தர்ன் சந்தேகமில்லை. நாள் ஒளிந்திருந்து இவர்கள் என்ன பேசிக்கொள்ளுகிறர்களெனக் கண் டறிந்து பிறகு, சமயத்தில் இவ்வோலையையும், கணை யாழியையுங் கொடுத்து மனோஹரன் மடியாவண்ணம் செய்யவேண்டும். இதோ வந்துவிட்டார்கள்!) -

(ஒரு புறமாக மறைந்து நிற்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/123&oldid=613537" இலிருந்து மீள்விக்கப்பட்டது