பக்கம்:மனோகரா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-3 மனோஹரன் 117

or :

முடியுமானால் கொடுக்கிறேன் சீக்கிரம் கேளும், முடியு "மானால் கொடுக்கிறேன். சீக்கிரம் கேளும், காலமாய் விட்டது. இறப்பதானால் நான் சீக்கிரம் இறக்க வேண்டும்! - -

அரசே, நான் வாளை விசியுமது சென்னியை வாங்கும் பொழுது நீரும்.உமது வாளை வீசி எனது கந்தரத்தை பும் வெட்டுவதாக வரமளியும்!

என்ன! நான்தான் இறக்கவேண்டும், என் விதி உமக் கென்ன? நானாவது உம்மைக் கொல்வதாவது ஒரு காலும் மாட்டேன்.

அரசே, தாம் எனக்கு வரமளித்தபின் பின்வாங்குவது நியாயமன்று. நீர் இறந்தபின் உம்மைக் கொன்ற கொடும் பாவியாகிய நானோ உயிர் வாழ்ந்திருப்பேன்? அப்படியிறப்பவன். தம்முடைய சரத்தால் இறப்பேனா யின் ஜன்மம் புனிதமாகும். அவ்வளவே நான் வேண்டிக் கொள்வது அரசே! உமக்காக நான் சிறு வயதுமுதல் பாடு பட்டதற்காக த ம் இவ்வளவு செய்யலாகாதா ?

(கட்டியனைத்து சத்தியசீலரே! மெச்சினேன். உமது பேரன்பை உம்மைக் கொல்ல எனக்குச் சிறிதும் மன மில்லை ஆயினும் நீர் வேண்டுவதை மறுக்கலாகா தென உடல் பட்டேன். எடும் வாளை!

அரசே, ந்ாமிருவரும் நமது கோரிக்கையைக் கூறியிறப் போம் உமது நிச்சயமென்ன ?

(வாளை வீசி என்னைப்பெற்ற தாய் தந்தையரன்றி எனக்குப் பிறிதொரு தெய்வமில்ல்ை சுத்த வீரமே என்று திலைத்திருக்குமாக!

(வளைவீசி பிறருடைய நன் ைபக்காக வாழ்வதே

மாந்தர் கடமை! சத்தியமே என்றும் நிலைபெற்றி ருக்குமா க!

[இருவரும் வாளை ஒங்குகிறார்கள்.)

மறைந்திருந்த புருஷோத் கமராஜன் வேகமாய் வெளியே வருகிறார் s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/126&oldid=613543" இலிருந்து மீள்விக்கப்பட்டது