பக்கம்:மனோகரா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

prrr :

{{}

பத் :

மனோஹரன் |அங்கம்-1

ஆமாம், அம்மா, படைகளெல்லாம் அணி வகுத்து நிற் கின்றன-புறப்படும் லக்னம் வந்துவிட்டது

(தன் மகனைக் கட்டியணைத்து கண்ணே, மனோஹரா, யுத்தமுனையிற் சென்று பகைவரை வென்று அழியாப் புகழுடன் சீக்கிரம் திரும்பிவருவாய்!-கண்ணே, என்ன முகம் திடீரென்று வாடியது? இந்த யுத்தத்திற்குச் செல்ல அஞ்சுகிறாயோ?

அம்மணி, நானோ அஞ்சுவேன்? என்ன வார்த்தை சொன்னீர்! அப்படியொன்றுமில்லை; என்னையொத்த சுத்த வீரர்களுக்கு யுத்தத்தில் வெற்றி பெறுவதைவிட, வெற்றி பொருந்திய யுத்தத்தில் உயிர் விடுவதே அதிக சந்தோஷத்தைத் தரத்தக்கது. அதற்காக நான் வருந்த வில்லை ஒருவேள்ை யுத்த முனையில் நான் இறக்கும்படி நேரிட்டால் உமது திருமேனியை நான் மறுபடியும் எக் காலம் காண்பது என்னும் ஞாபகம் வந்தது. அதுவே சற்று என் மனத்தைக்கலைத்தது, வேறொன்றுமில்லை.

இதற்கெல்லாம் வருந்தலாமா நீ? யுத்தத்தில் நீ இறந்தால் வீர சொர்க்கமடைவாய்! தெய்வ கடாட்சத்தால் நீ இறக்க வேண்டிவந்தால் கையில் வாளுடனும் மார்பிற் காயத்துடனும் இறப்பாய் முதுகிற் காய்த்துடனிறவாதே! எனக்காக நீ சிறிதும் வருந்த வேண்டாம். நீ ஜெயம் பெறறு வருகிறாயென்று கேட்பதைவிட யுத்தமுனையில் சுத்த வீரனாயிறந்தாயென்று கேட்பேனாயின் நான் அதிக சந்தோஷமடைவேன்.-கண்ணே, அப்படி, உனக்கேதாவது கெடுதி நேரிடுமாயின் நானும் விரைவில் உன்னேவந்து சேருவேன்; எனக்கு ஏதாவது அறிகுறி யனுப்புவாய்

அம்மா, உங்களுக்கு இந்தச் சந்தேகமெல்லாம் எதற்காக? அப்படி ஒன்றும் நேரிடாது. சீக்கிரம் விடையளித்தனுப்பும்.

கண்ணே, சுகமாய்ப் போய்வா.

|பஞ்சத்தின்மீது சாய்ந்து விடுகிறாள்.'

அப்பா முக்காற் பாகம் தொந்தரவு தீர்ந்தது. இன்னும்

காற்பாகமிருக்கிறது. (விஜயாவின்புறம் திரும்பி) விஜயா, நான் போய்வாலா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/13&oldid=613252" இலிருந்து மீள்விக்கப்பட்டது