பக்கம்:மனோகரா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-3 மனோஹரன் 121

ஆரும் காட்சி

இடம்-பதமாவதியின் அறை. காலம்.--இரவு.

பத்மாவதியும், விஜயாவும் வருகிறார்சள்.

மாமி, நான் சொல்வதை நம்புங்கள். என் பிரான நாதர் உயிரோடுதாணிருக்கிறார்; இறக்கவில்லை. தாம் ஒன்றும் அவசரப்பட்டுச் செய்துவிடலாகாது. அக்கினிப் பிரவேசமாவதற்குச் சித்தஞ் செய்து வைத்திருந்த தீயை அவித்து விடும்படி கட்டளையிட்டுவிட்டு வந்தேன். தாம் இனி ஒன்றுக்கும் வருத்தப்பட வேண்டாம்.

விஜயா, நீ சொல்வதொன்றும் எனக்கு நன்றாக விளங்க வில்லை. மனோஹரன் இறக்கவில்லையென்று உனக் கெப்படி உறுதியாய்த் தெரியும் ?

மாமி, எல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியும். என்னிடந் தானிப்பொழுது இறப்பதில்லையென்று வாக்களித் தாரே, இதினின்றும் தவறுவாரோ ?

இதைக்கொண்டோ இறக்கவில்லையென்று கூறி விட் டாய் ?

இல்லை மாமி, உட்காருங்கள். இறந்திருந்தால் அவ ருடைய உடலெங்கே? நீங்கள்தான் கொத்தளங்களிற் போய்ப் பார்த்திரே, அகப்பட்டதா ?

ஆம், ஆம்-சத்தியசீலரைக் கேட்கலாமோவென்றால் அவரை யுங் சாணோம்.

ராஜப்பிரியரையுங் காணோம் -மாமி, இவர்கள் மூவரும் எங்கேயோ போய்விட்டார்கள், நீர் ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம்.

மனோஹரன் இவ்வளவு காரியமெல்லாம் நடந்த பிறகு எப்படி உயிர்பிழைத் திருப்பான்? ஆயினும் இம் மூவர் களையும் காணாசிருப்பது சந்தேகத்திற்கு இடங் கொடுக்கிறது (தனக்குள்) விஜயாவைக் கேட்பதில் பிரயோஜனமில்லை. அவளுக்கு ஒன்றும் தெரியாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/130&oldid=613551" இலிருந்து மீள்விக்கப்பட்டது