பக்கம்:மனோகரா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மனோஹரன் காட்சி-7

சொல்வது? நான் உனது புருஷனாதல்பற்றி, உனது சீர் தங்கிய பாதங்களில் வீழ்ந்து வேண்டாத குறை யொன்று தான்-அதுவும் செய்யவேண்டுமென்றால் செய்கிறேன். விஜயா, மஹாராஜா இக் காரியம் செய்தல் தவறெனச் சொல்லித் தடுத்துவிட்டு வா.

மாமா, அப்படி செய்யலாகா தென்று யாமி தடுக்கச் சொன்னார்கள்.

விஜயா. உன் புருஷனை நான் துற்றியதெல் றாம் நீயும் மன்னிப்பாய்! -

சரிதான், மாமா.

நீ கூறியபடி உனது மாமியும் என் மனங்குளிர அப்படியே கூறலாகாதா ?

ஒரு அற்ப வேசியினுடைய மன்னிப்பு அவருக்கென்னத் திற்கு ?

பத்மாவதி, நான் இதுவரையில் என் துக்கத்தைப் பொறுத்துப் பார்த்தேன். இனி என்னால் பொறுக்க முடியாது! மறுபடியும் அதையே கூறிக்கொண்டிருக் கின்றனையே! நான் பட்டதெல்லாம் போதாதோ? நான் செய்ததெல்லாம் தவறு மன்னிப்பாய் என்று உன்பாதத்தில் வீழ்ந்து வேண்டாத குறையாக வேண்டி யும், உனது கடினசித்தம் இனகவில்லையல்லவா ? இன்னும் நான் வேறென்ன செய்யக்கூடும்? இனி பயனில்லை. நான் இனிமேல் இவ்வுலகில் உயிர்வாழ்ற் திருப்பது நலமன்று. பத்மாவதி, இதோ, கடைசி வார்த்தை சொல்லுகிறேன், நான் செய்த குற்றங்களை யெல்லாம் நீ மன்னித்ததாக இப்பொழுது கூறாவிட் டால் இதோ உன் முன்பாகவே எனதுயிரை இவ்வுடை வாளுக்கு இரையாக்குகிறேன். என்ன சொல்லுகிறாய்? -இனி நான் தாமதியேன்-பத்மாவதி! இதோ நீயே என்னைக் கொல்கிறாய்!

பிராணநாதா!-மஹாராஜா வேண்டாம்! வேண்டாம் பொறும்! நான் உம்மை மன்னித்தேன்! மன்னித்தேன்!

நீ என்னை மன்னித்தபின் நான் இப்புவியில் பெறத்தக்க பேறென்ன இருக்கிறது? ஐயோ! இப்பதினாறு வருஷம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/135&oldid=613562" இலிருந்து மீள்விக்கப்பட்டது