பக்கம்:மனோகரா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-3 மனோஹரன் 127

ւ! :

ս:

சளாக உனது மகிமையையும் குணத்தையும், பேரழகை யும் அறியாது, நாயினும் கடையாயன்றோ உழன்று வந்தேன். நேற்றைத்தினமே அவைகளைக் கண்டேன்,

விஜயா, உன் மாமனாரிடம் சென்று அந்த வாளை

வாங்கிக் கொண்டுவா இப்படி. ஒஹோ! பத்மாவதி, இனியொன்றிற்கும் அஞ்சவேண் டாம். விஜயா, வேண்டுமென்றால் எடுத்துக்கொண்டு போ, இதோ.

மஹாராஜா, நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன். நீர் இனி சுகமாய்-அவளை மணந்து நெடுநாள் வாழ் வீராக!

பத்மாவதி! என்ன சொல்லினை? வசந்தசேனையை மணந்து நான் சுகமாய் வாழ்ந்திருப்பதா? அதை விடப் பாழ் நரகத்தில் வீழ்ந்து எரிந்துபோகும்படி கூறுயிருக்க லாகாதா? என் மனத்தைப் பரிசோதிக்கின்றனையோ? கண்ணே, இனியும் இவ்வளவு துன்பத்திற்கும் காரண மாயிருந்த அ ந் த ப் பாதகியைக் கண்ணெடுத்துப் பார்ப்பேன் என்று நம்புகின்றனையோ? இதுவே சத்யம்! இனி அந்தப் ப தகியை மனத்தில் நினைப்பேனாயினும், உத்தம பத்தினிகளுக்குத் துரோகம் செய்யும் பாதகர்கள் செல்லும் அழியா நரகத்தில் அமிழ்வேனாக! உன்னை யன்றி வேறொரு ஸ்திரீயை நான் கனவில் நினைப்பி னும், என்னரசு முழுமையும் அழிந்து. அந்த நொடியே இறந்து, மறு ஜன்மத்தில் அலியாய்ப் பிறந்து, உலகிலெ வரும் நகைக்க உழல்வேனாக! இதிருக்கட்டும்பத்மாவதி, விடை பெற்றுக்கொள்கிறேனென்றனையே, அது என்ன சமாசாரம் ?

நான் இவ்வுலகிற் பிறந்த வேலை நிறைவேறிவிட்டது; ஆகவே நான்

ஒஹோ! பத்மாவதி, நீ இறப்பானேணிப்பொழுது? அக்னிப் பிரவேசமாகச் சித்தம் செய்திருப்பதாகக் கூறினார்கள், அதைத் தடுக்கவன்றோ நான் வந்தேன்? இனி நீ இறப்பானேன்? எல்லாம் சரியாய்விட்டதே!

மனோஹரன்-இறந்தபின் நான் உயிர்வாழவேண்டிய நியாயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/136&oldid=613564" இலிருந்து மீள்விக்கப்பட்டது