பக்கம்:மனோகரா.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.11 மனோஹரன் 133

வனை : கண்ணை மூடிக்கொண்டு பார்ப்போம், அப்பொழு தாவது தூக்கம் வருகிறதா என்று. ஐயோ! - கண்ணை மூடும்பொழுதெல்லாம் மனோஹரனும் பத்மாவதியும் எதிரில் தோற்றுகிறது போலிருக்கிறதே! ஐயோ! நான் என்ன செய்வது? தாக்கமும் பிடிக்கவில்லை. சற்று உலாவிப்பார்க்கவா? (எழுந்திருந்து)-சி! அதிலும் பிரயோஜனமில்லை, என்ன சங்கடம்! என்ன சங்கடம்! ஐயோ! நித்திரையாவது வராதா படுத்து இல்லை! இல்லை!-அப்பா மனோஹரா சீ! என்ன மனப் பிரமை! மனோஹரன் வந்து என்னை வெட்டினாற் போல் தோற்றியதே. சித்தப்பிரம்ை: ஐயோ! எனக்குப் பயித்தியம் பிடித்துவிட்டதா என்ன?--சி. இதென்ன? மனதைத் தைரியப்படுத்திக் .ெ கா ஸ் டு தாங்கிப் பார்ப்போம்.

(மறுபடியும் சயனித்துக்கொள்கிறாள்.)

கேசரிவர்மன் அருவம் தோன்றுகிறது.

யார் அது?-ஐயோ! வந்தாயா மறுபடியும்? கே ; #A3ణజ–35* மறுபடியும்!

வணை : உன்னை யார் அழைத்தது? போ! போ! ஐயோ! நான் படுவதெல்லாம் போதாதோ? நீயும் வந்து கிளம வேண்டுமோ ?

கே : வசந்தசேனை!-நான் அப்பொழுதே சொன்னேனே கேட்டனையா? படு இப்பொழுது!-உன் தீவினை உன்னையே அழித்தது!

வனை அழித்துக்கான் வீட்டதே! இன்னும் என்ன இருக்கிறது

எல்லாம் தீர்ந்ததே!

கே : எல்லாம் தீரவில்லை! இதனுடன் உனது துக்கம் நீங்கிய தென எண்ணாதே என்னைக் கொன்றதற்கும், உத்தமி யாகிய பத்மாவதி தேவிக்கும் மனோஹரனுக்கு நீ செய்த தீங்கிற்கும். தக்க தண்டனையாக நீ சீக்கிரம் இறப்பாய்! .

அனை: இறந்துபோனால் போகட்டும்: உன்னைக் கேட்கவில்லை

Փւյո!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/142&oldid=613576" இலிருந்து மீள்விக்கப்பட்டது