பக்கம்:மனோகரா.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i:36

மனோஹரன் (அங்கம்-4

இரண்டாவது காட்சி

இடம்-அரண்மனையில் ஒரு திட்டிவாசல். காலம்-இரவு.

அ !

விக !

ஒரு புறமாக விகடனும் மற்றொரு புறமாக

அமிர்தகேசரியும் வருகிறார்கள்.

யார்? விகடரே! ஆம், சகடரே! இருட்டில் நன்றாய்த் தெரியவில்லை. எனக்கும் ஒன்றும் தோன்றவில்லை. போனாற்போகிறது. வசந்தரைப் பார்த்திரோ ? வந்தால் வருகிறது, வசந்தரைப் பார்த்தேன்

எங்கே ?

மஹாராஜாவின் சபையில். இப்பொழுது மஹாராஜாவின் சபையில் அவருக்கென்ன வேலை ? இப்பொழுது ஒன்றுமில்லை; நேற்றல்லவோ பார்த்தேன் என்ன ஐயா! எப்பொழுது பார்த்தாலும் விளையாட்டா யிருக்கிறது உமக்கு! வசந்தர் மஹாராஜாவினுடைய ஆடையாபரணங்களையெல்லாம் அணிந்துகொண்டு' எங்கேயோ போய்விட்டாரென்று தேடிக்கொண்டிருக் கிறார்கள் எங்கும்! உமக்குப் பரிகாசமாயிருக்கிறது! எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். வசந்தனாப் பார்த்தீரா ?

ஓ! (அழுகிறான்.) என்ன ஐயா, கேட்டதற்குப் பதில் கூறாத அழத் தொடங்குகிறீர்கள்! வசந்தர் எங்கே தெரியுமா ? வசந்தர்!-உம்-உம்: (தேம்பி அழுகிறான்.?

என்ன வசந்தருக்கு? எதற்காக ஐயா அழுகிறீர்கள்) இதென்ன சங்கடமா யிருக்கிறது! :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/145&oldid=613582" இலிருந்து மீள்விக்கப்பட்டது