பக்கம்:மனோகரா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ மனோஹரன் |அங்கம்-1

வி : திரும்பி வருகிற சமாசாரம் என்னிடம் கூறுவானேன்? அப்பொழுது யார் உயிருடன் இருக்கப் போகிறார்களோ அவர்களிடம் கூறும்!

அப்படியல்ல, விஜயா மனோதைரியத்தைக் கைவிடாதே

மனோஹரனுடைய மனைவியாயிருந்தும் நீமன அதைரியப் படலாமா? சீக்கிரம் எனக்கு விடையளிப்பாய் (முத்த மிட்டு, கண்ணே, நான் போய்வருகிறேன்.-அம்மா, விஜாயவை உம்மிடம் ஒப்புவித்துப் போகிறேன். அவளுக்கு நீர்தான் தேறுதல் சொல்லவேண்டும்,

fவிஜயாவின் கரத்தைப் பற்றிபத்மாவதியின் கரத்தில் வைக்கிறான். வெளியில் யுத்த பேரிகை முழங்குகிறது.!

அம்மா, காலம் நெருங்கிவிட்டது சீக்கிரம் உத்தரவளியும் எனக்கும், தங்களுடைய ஆசீர்வாதத்தால் நானும் உயிருடன் ஜெயம் பெற்று வரவேண்டும்.

தr

பத் : ராஜப்பிரியா, அப்படியே சுகமாய் வெற்றி பெற்று வா.

அப்பா, மனோஹரனைப் பார்த்துக்கொள்.

மா : அம்மணி, எனக்கு ஒரு துணை வேண்டுமோ ?

பத் : அவ்வாறன்று. யானைக்குமடி சறுக்குமென்பர், யுத்தத்தில்

சேமரதனாக ஓர் ஆப்தின் எப்பொழுதுமிருக்கவேண்டும்.

(யுத்தபேரிகை மறுபடியும் முழங்குகிறது.!

ம : (தன் தாயாரிடமும் விஜயாவிடமும் விடைபெற்று. நான்

போய் ஜெயித்து வருகிறேன்!

(மனோஹரன், ராஜப்பிரியன், சத்தியசீலர் மூவரும் போகின்றனர், பத்மாவதி தன் முகத்தை முந்தானையால் மூடி மஞ்சத்தின் மீது சாய்ந்து விடுகிறாள். விஜயா தேம்பி யழுது பத்மாவதியின் கடியின்மீது வீழ் கிறான்.

நீ : அம்மா, இதுவரையில் எவ்வளவோ மனவுறுதியுடனிருந்தீர் களே, இப்பொழுது தாமே கண்ணிர் விடுகிறீர்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/15&oldid=613258" இலிருந்து மீள்விக்கப்பட்டது