பக்கம்:மனோகரா.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) மனோஹரன் 143

யென எனக்குச் சிறிதும் அச்சமில்லை. நான் வருந்திய தெல்லாம் இவ்வளவழகிய கரத்தையுடைய பெண் மணியை மணந்து, அவளுக்குத் துரோகம் செய்து, இக் சரத்தைப்பற்றி அக்கினி சாட்சியாய் மணந்தபொழுது நான் செய்த பிரதிக்ஞைகளையெல்லாம் தவறினேனே யென்று வருந்திக் கண்ணிர் விட்டேனேயொழிய வேறொன்றுமில்லை. வெளியில் பேரிகை முழங்கு கிறது ஜய பேரிகை முழங்குகிறது! ஏதோ நற்சகுன மாகத்தானிருக்கிறது!-பத்மாவதி, நான் விடை பெற்றுச் செல்கிறேன் -விஜயர், நான் வருகிறேன். நான் தெய்வ தீனத்தால் இறக்குக்படி நேரிடுமாயின், நீயும் அக்கினிப்பிரவேசமாக வேண்டியதில்லை. நீ கர்ப்பிணியாயிருக்கிறாய்; நீ தப்பிப் பிழைக்கத் தக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். சேர செளபலராஜனு டைய நகரிற்குச்சென்றால், அவன் உன்னை மிக்க உபசாரத்துடன் காப்பாற்றிவருவான். பிறகு உன் பிராணநாதனிருக்குமிடமறிந்து, அவனுடன் போய்ச் சேர்ந்து, நான் அவனை மன்னிப்புக்கேட்டதாகவும். உக்கிறன் மீது பழிவாங்கும்படியாகவும் ேவ ண் டி க் கொண்டேனென்று சொல். தெரியுமா ?

அப்படியே ஆகட்டும் எப்படியும் நீர் வெற்றிபெற்று. வருவீரென்றே நினைக்கிறேன், அஞ்சவேண்டாம்.

பத்மாவதி, உனக்கொன்றும் நான் கூறவேண்டியதில்லை

இல்லை, பத்மாவதி, விஜயா, நான் போய்வருகிறேன்.

ஐயமுண்டாகுக!

காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/152&oldid=613596" இலிருந்து மீள்விக்கப்பட்டது