பக்கம்:மனோகரா.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) மனோஹரன் 147.

மூன்ருவது காட்சி

இடம் பாசறை. காலம்-மாலை.

காயம் அடைந்த புருஷோத்தமராஜன் மஞ்சத்தின் மீது

சயனித்திருக்கிறார்.

ஒரு புறமாக மனோஹரன் ம | று வேடக்கடன் வருகிறான்.

களத்து உறங்குகிறார். நான் ஒரே பிடிவாதமாய்ப் பெளத்தாயணன் கூறியதற்கிணங்காதிருந்து விட்டேனா யின் இவர் இந்நேரம் இறந்திருப்பாரன்றோ? நான் என்ன தப்பிதம் செய்யவிருந்தேன்? இவர் இறந்திருந் தால் அன்னையும் உடனே உயிர் விடுவார்கள். பிறகு இவ்விருவரையும் போக்கிய பாவம் என்னையே தொடரு மல்லவா? அம்மட்டும் பெளத்தாடினன் நமக்கு நல்ல உதவியேசெய்தான். அதிருக்கட்டும்-இ ப் பொழுது நான் என்ன செய்வது? மஹ ராஜாவுக்குத் தன்னைக் காப்பாற்றியது இன்னானெனத் தெரியாது; என்னை யாரோ என்று நினைக்கிறார்! ஆயினும் என்னை எந்நேரமும் நினைந்து வருந்திக்கொண்டிருக்கிறார். என்பது ற்கு ஐயமில்லை. நேற்றைத்தினம் காய்ப்பட்டு மூர்ச்சையாகி விழும் தருணத்திலும் என் பெயரைச் சொல்லிக் கொண்டு விழுந்தார். சீ! இனி நான் கடினச் சித்தமுடையவனாய் இருக்கலாகாது. வசந்தசேனையோ தெய்வகதியால் இறந்துவிட்டாள். மஹாரா ஜா வுக்கும், புத்தி வந்துவிட்டது; நான் இன்னா னென்று வெளி யிடவா? சீ! எனக்கினி பிடிவாதமாகாது! என் தாயாரும் விஜயாவும் என்னைக் காண என்ன விரும்புவார்க்ள்!. மஹ ராஜாவும் தன்னைக் காப்பாற்றியவனும் சோழ சைனியங்களுக்கு வெற்றியைக் கொண்டு வந்தவனும் நான் தானென அறிந்தால் என்ன சந்தோஷிப்பார்! ஆயினும் நானே போய் எப்படி வெளியிட்டுக் கொள் வது ?-இதோ, நம்மவர் வருகிறார்கள். மஹாராஜா வு விழித்துக்கொண்டனர் நாங்கள் போப் வருகிறோ மென்று சொன்னால் அவர் என்ன பதில் கூறுகிறாரோ பார்ப்போம்.

சத்தியசீலர், பெளத்தாயணன், ராஜப்பிரியன் மூவரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/156&oldid=613604" இலிருந்து மீள்விக்கப்பட்டது