பக்கம்:மனோகரா.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.4 மனோஹரன் 153

கான்காம் காட்சி

இடம்-மஹாராஜாவின் சபை. காலம்-காலை. இடையில் ஒரு திரையிடப்பட்ட சேர தேசத்துச் சிங்காதனத்தின்

மீது ஒரு புறம் புகுஷோத்தமராஜனும் மற்றொரு புறம்,

பத்மாவதியும் வீற்றிருக்கின்றனர்.

விஜய் பத்மாவதியின் அருகில் தாதியர் புடைசூழ் நிற்கிறாள்

குரு, ரணவீரகேது, மந்திரி பிரதானிகள் சபையில் உட்கார்ந்திருக்

கின்றனர்.

அமிர்தகேசரி ஒருபுறமாக நிற்கிறான்.

@ 。 புருஷோத்தமா. இப்பொழுதாவது புத்தி வந்ததா? அப் பொழுதே எவ்வளவு நியாயம் கூறினேன், கேட்க மாட்டேனென்றனையல்லவா? என் சொற்படி அக் காலத்தில் நடந்திருப்பையாயின் இவ்வளவு கஷ்டமும் உனக்கு நேர்ந்திராதே! ஆயினும் நீயே உனது துர் நடத்தையையறிந்து திருந்தியமையால் ஜகதீசன் உன் மீது கிருபைகொண்டு, உன்னுயிரையும், உனது ராஜ்யத் தையும் முடிவில் காப்பாற்றியருளினார். இனியாவது அப்பொழுது அனுபவித்ததைக் கொண்டு திருந்து வாயாக துர்நடத்தை எப்பொழுதும் துக்கத்திற்கே கொண்டுபோய்விடும்! நன்னடத்தை நலத்தையே தரும்.

f{

குரு மஹாராஜ் இந்தப் பதினாறு வருடங்களாக எனக்குப் பயித்தியம் பிடித்திருந்தது இப்பொழுதான் என் கண்கள் விளங்கின தமதருளால் இதுவரையில் தமக்கு நான் செய்த பிழைகளையெல்லாம் மன்னித் தருள வேண்டும்,

கு : சுபேவ! இனிமேல் ஒரு குறைவுமின்றிச் சுகமாய் வாழ்

- - வாயர்க! உன் புத்திரனையும் நீ சீக்கிரம் பெறுவாய். உத்தம பத்தினியான பத்மாவதிக்கு நீ தீங்கிழைத்த காரணத்தால் தான் இவ்வளவு துயரம் .னக்கு நேர்ந்த தென நினை! அவளது ம . Eப்பைப் பெற்றமையால் இனி அத்துயரமெல்லாம் சீக்கிரம் எளிதில் நீங்கிவிடும், அஞ்சவேண்டாம். புருஷோத்தமா மனோஹரணைழ் பற்றி ஒரு சேதியும் வரவில்லையோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/162&oldid=613617" இலிருந்து மீள்விக்கப்பட்டது