பக்கம்:மனோகரா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

ւ I

கு!

மனோஹரன் (அங்கம் -5

சுவாமி, சில தினங்களுக்குமுன் வந்த ஒற்றர்கள் மனோஹரன் மாத்திரம் தனியாக வடப்பிரதேசம் போய்விட்டதாகவும், சத்தியசீலரும், ரா ஐப்பிரியனும் மனோஹரனைத் தேடிக் காணாது மேற்கே நோக்கிச் சென்றதாகவும் கேள்விப்பட்டதை வந்து அறிவித்தனர். என் மைந்தனை இவ்வுலகில் காண்பேனென்னும் ஆசையை அன்றே விட்டுவிட்டேன்.

விகடன் வருகிறான். மஹாராஜா, அவர்களெல்லோரும் முதல் வாயிலில் நின்று கொண்டு உள் ள வரலாமா என்று கேட்டுவரச் சொன்னார்கள்,

மந்திரிகள்ே, உங்களில் சிலர் சென்று அழைத்துவாருங்கள் மரியாதையுடன்.

(சில மந்திரிகள் பிரதானிகள் வெளியே போகின்றனர்.].

குரு மஹாராஜ், இப்பொழுது வருகிற வீரகேசரி

யென்னும் மஹாவீரனால்தான் நானும் என்நாடும்

நிலைத்தது! இல்லாவிடின் நானும் மடிந்து என் ராஜ்ய மும் அழிந்திருக்கவேண்டும். ஆகவே அவருக்குத் தக்க மரியாதை செய்யும் பொருட்டு இந்தச் சபைக்கு வர வழைத்திருக்கிறேன்.

மிகவும் சந்தோஷம்! நமது ஆபத்துக் காலத்தில் உதவின. வர்களை ஒருகாலும் மறக்கலாகாது அலர்களுக்குத் தக்க கைம்மாறு செய்வதே முறைமையாம். «м

மஹாராஜா, மனோஹரரோ நமது நாட்டை விட்டுப் விட்டார்; ஆகவே நமது நாட்டிற்கு எப்போழுதும் அடிக்கடி சத்ரு பயம் நேர்ந்துகொண்டேயிருக்கும். ஆகவே இப்படிப்ட்ட சுத்த வீரரை நமது தேசத்திலேயே நிறுத்திக்கொள்வோமாயின் நமக்கு மிக்க நலம் ஆதலால் இந்த வீரகேசரிக்குச் சேனாதிபதிப்பட்டம் கட்டி இங்கேயே இருந்து விடும்படி செய்யலாகாதா தாம் ? ஆம்! ஆம்! இது நல்லயோசனைதான் வந்தவுடன் நாம் எல்லோரும் சொல்லிப்பார்ப்பொம், இதோ வருகிறார்கள்.

(ஜயபேரிகை முழங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/163&oldid=613619" இலிருந்து மீள்விக்கப்பட்டது