பக்கம்:மனோகரா.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4 மனோஹரன் 155

மனோஹரன், சத்தியசீலர், ராஜப்பிரியன். பெளத்தாயணன் நால்வரும் முழுக்கவசமணிந்துமுகத்தை மூடி மந்திரி பிரதானிகள் புடை சூழ, வருகின்றனர்

சபையோர்களெல்லாம் ஜய கோஷம் செய்கின்றனர்.

ւ : வீரகேசரி! வாரும்! எனதுயிரைக் காத்த வீர சிங்கமே வாரும்! எமது நாட்டைக் காப்பாற்றிய வீரச் செல்வமே! வாரும் தாம் எனக்கும் என் பிரஜைகளுக்கும் செய்த உதவிக்குத் தக்க கைம்மாறு செய்ய நான் அசக்தனா யிருக்கிறேன். ஆயினும் தாம் என்னால் கொடுக்கத் தக்க எதையாவது கேளும், தருகிறேன். இந் நாடு முழுவதையும் கேட்டபோதிலும் தருகிறேன்! என துயிரை வேண்டினும் தருகிறேன்! நீர் காத்தபடியால் அது உம்முடையதே!-உம்முடைய வேண்டுகோளின் படி நானும் என் பத்தினியும க. இதோ சிம்மாசனத்தின் மீது வீற்றிருக்கிறோம், இனி தாம் தடையின்றி கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

to: |சிங்காதனத்தெதிரிற் போய் முழந்தாளிட்டுப் பணி

கிறான்.)

ւյ : வீரகேசரி! இதென்ன? என் முன்பாக முழந்தாளிடு

கிறீரே ?

to f மஹாராஜா, நான் இவ்வுலகில் எதை முக்கியமாகப்

பெற விரும்பினேனோ அதைப் பெற்றேன். இனி எனக்கு வேறொன்றும் வேண்டியதில்லை!-அம்மணி!

Iமுக முடியை எடுத்து நான் அன்று செய்த சபதத்தை நிறைவேற்றினே னன்றோ? fj :f (எழு ந் தோ டி மனோஹரனைக் கட்டியனைத்து)

கண்னே! நிறைவேற்றினை! நிறைவேற்றினை

விஜ: பிராணநாதா!

(மனோஹரனைக் கட்டிக் கொள்ளுகிற ள்.) எல்லோரும். மனோஹரர்! மனோஹரர்!

ւլ : (சிங்காதனத்தினின்றும் இழி ந் து மனோஹரனைக் கட்டியணைத்து) நான் கனவு காணவில்லையே இல்லை, இல்லை!-கண்ணே மனோஹரா மனோஹரா இன்றே ஆன்னைப் பெற்றேன் இன்றே உன்னைப் பெற்றேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/164&oldid=613621" இலிருந்து மீள்விக்கப்பட்டது