பக்கம்:மனோகரா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-21 மனோஹரன் 11

நீ :

Gఙ) డ7 :

அப்படியே, அம்மணி, அதை நான் மறப்பேனா? ஒரு காலும் மறக்கமாட்டேன். அம்மா, என்னுடைய தமயனார் அமிர்தகேசரியைப்பற்றி முன்பே தங்களிடங் கூறியிருக்கிறேன், அவர் எப்படியாவது நம்முடைய ராஜகுமாரருக்குக் கண்டிருக்கும் வியாதியைப் போக்கி விடுவதாகக் கூறுகிறார். எப்படியாவது தாங்கள் மஹா ராஜாவிடங் கூறி அவரை நமது அரண்மனை வைத்தி யராக ஏற்றுக்கொள்ளும்படி சொல்லவேண்டும்.

அதற்கென்ன? அப்படியே ஆகட்டும், நீ போ: நான் சொன்னபடி மாத்திரம் செய்.

அப்படியே, அம்மா! நான் பிறகு அழைத்து வருகிறேன் அஒ:ர்ை. (போகிறாள் )

இதென்ன சங்கடம்! நான் பத்மாவதிக்குத் தீமை நினைத்துச் செய்யுந் தொழில்களெல்லாம் அவளுக்குக் கடைசியில் நன்மையாய் முடிகின்றனவே! மனோஹரன் யுத்தத்தில் மாளட்டுமெனக் கருதி முத்துவிஜயபாண்டி யனைத் துண்டி விட்டால், இதைக்கொண்டு பத்மா வதிதன் தந்தையினுடைய சபதத்தை நிறைவேற்றி விடுவாள்போலிருக்கிறதே! முன்பே மனோஹரனிடம் மஹாராஜாவுக்குப் பிரீதியுண்டாயிருக்கிறது. இப் பொழுது மனோஹரன் வெற்றி வீரனாகத் திரும்பு வானாயின் இதுவரையில் நான் பட்டபாடெல்லாம் வீனுக்கு விழலுக்கு முத்துலைக்கட்டி இறைத்ததே யாகும். இம்மனோஹரன் உயிருடனிருக்குமளவும் பத்மாவதியை நான் அசைக்க முடியாது விளையும் பயிர் முளையிலேயென்பது போல், சிறு வயது முதல் இவன் அதிபராக்கிரமம் உடையவனாயிருக்கிறான். ஐயோ! இப்படிப்பட்ட மகன் என் வயிற்றிலுதித் திருக்க லாகாதா? சிங்கம் சிங்கத்தின் வயிற்றில்தானே உதிக் கும் நரி சிங்கக் குட்டியை ஈனுமோ? என் பெயரை யழிக்க இந்தப் பயித்தியம் பிடித்த வசந்தன் உதித்திருக்

கிறனே! ஆகாத காரியத்தைப்பற்றி ஆலோசனை

செய்து அடையும் பயனென்ன!. இப்பொழுது நடக்க வேண்டிய க ச ரி ய த் ைத க் குறித்தெண்ணுவோம் போதாக்குறைக்கு விஜயாவும் கருத்தரித்திருக் கிறாளாம். அது மகனாகவே பிறக்குமென்பதற்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/20&oldid=613272" இலிருந்து மீள்விக்கப்பட்டது