பக்கம்:மனோகரா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மனோஹரன் 15

தோ

畿f*都

தோ :

எனக்கு மனச்சஞ்சலமில்லாதிருந்ததில்லையே! எந்நேர மும் எங்கு நாம் செய்யும் சூழ்ச்சிகள் தவறி விடுகின்றன வோ, எங்கு பிறர் அவைகளைக் கண்டுபிடித்துவிடுகின்ற னரோ, எங்கு மஹாராஜா என்மீதிருக்கும் ஆசை குன்றி விடுகின்றனரோ, எங்கு பத்மாவதியிடம் மறு படியும் அன்பு பிறந்துவிடுகிறதோ, என்னும் கவலை

பாதித்துக்கொண்டேயிருக்கிறதல்லவா? மனோஹர

னைக் காணும்பொழுதும், அவனைப்பற்றிக் கேட்கும் பொழுதும். அவனது தீரத்தை நினைக்கும்பொழுதும் என் மனம் எவ்வாறு நடுநடுங்குகிறது: மனோஹரன் பத்மாவதி குமாரனாகவும் விஜயாவுக்கு மாரனாகவும் எனக்கு மாறனாகவும் உதித்திருக்கிறானே! என்ன சங்கடங்கள்! எங்கு நோக்கினும் தொந்தரவுதான்; நான் பத்மாவதியின் தோழியாய்ச் சேர நாட்டிலிருந்து இங்கு வந்த பொழுதிருந்ததைவிட இப்பொழுது நான் அதிகமாயனுபவிக்கும் சுகமென்ன? கவலை புற்ற கருடனாய் வாழ்வதினும் கவலையற்ற காகமாய் வாழ்வதே மேலாகும்! இத் தொல்லைகளை யெல்லாம் விட்டு ஒருவருமறியாதபடி எங்கேயாவது ஒடிப்போய்த்

தொல்லையற்று என் வாழ்நாட்களைக் கழிக்கவா?

பத்மாவதி தன் கணவனுடன் முன்புபோல சுகமாய் வாழட்டுமே? இவர்களைப் பிரித்த பாவம் இன்னும் எனக்கெதற்கு? சீ! என்ன வாழ்வு

ஒரு தோழி வருகிறாள்

யார் அது? என்ன சமாசாரம்? நான் அழையாதிருக்கும் பொழுது என்னிடம் வரவேண்டாமென்று எத்தனை முறை உன்னிடங் கூறியிருக்கிறேன்?

ஆம், உண்மைதான். ஆயினும் பெளத்தாயனர் சீக்கிரம் உம்முடன் ஒரு சேதி கூறிவரும்படி அனுப்பினார்,

ஆம், ஆம்! என்ன சமாசாரம்? என்ன சொல்லச் சோன்னார்?

இளவரசர் ஜெயம்பெற்று நம்முடைய பட்டணத்தை நோக்கித் திரும்பி வருவதாகவும், முன்னாகத்தாம் முத்து விஜயபாண்டியனிடமிருந்துவென்ற அநேக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/24&oldid=613284" இலிருந்து மீள்விக்கப்பட்டது