பக்கம்:மனோகரா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-1) மனோஹரன் 23

嘯 。

மகாராணி! நான் அறியாமற் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். இங்கே யாரோ ஒருவர் இருந்தார்: அவர் ராஜகுமாரர் வருவார், உன்னைக் கண்டால் கெடுதி செய்வார், இதற்குள் மறைந்துகொண்டிரு, என்று என்னிடம் கூறினார்|விகடன் தன் வேஷத்தைக் களைந்துவிட்டு மறுபடியும் மெல்ல வருகிறான் ஒரு புறமாக.)

அம்மணி, நமஸ்காரம்; என்ன சமாசாரம்? என்ன சங்கதி? என்ன விசேஷம்? எல் ன தாத்பரியம் ?

விகடா ! இதெல்லாம் உன் வேலையோ?

என்ன அம்மணி! எனக்கொண்ணுந் தெரியாதே; நான் துரங்கிக்கினு இருந்தேன், கூச்சல் கேட்டு என்ன விஷய மிண்ணு ஒடிவந்தேன். தூக்கமெல்லாங் கெட்டுது. என்ன சேதி?

அம்மணி, இவர்தான் என்னை மறைந்து கொள்ளும்படி சொன்னதென்று நினைக்கிறேன்.

பாத்தைங்களா ஐயா! உட்டேனா நானு? சந்தேக மில்லை!

விகடா! நான் இம்முறையும் உன்னை மன்னித்தேன். இனி இம்மாதிரியான தவறு செய்யாதே? இதென்ன சங்கடமாயிருக்கிறது!

இல்லெ, அம்மணி. நான் மறுபடியுஞ் செய்யவேமாட் டேன் சந்தேகமில்லை! ஆமாம், அம்மா! சந்தேகமேயில்லை! நீலவேனி, இவர்தானா உன் தமையனாராகிய வைத் தியர்? ஆமம்மா, இவர்தான் என் தமயனாராகிய பயித்தியர். இவர் அரண்மனை விதுாஷகர், இவர் கூறுவதைக் கவனிக்க வேண்டாம் அண்ணா.-(வசந்தசேனையுடன்)

ஆமாம், அம்மா, எப்படியும் ராஜகுமாரருக்குக் கண் டிருக்கிற வியாதியை நீக்கிவிடுவதாகக் கூறுகிறார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/32&oldid=613307" இலிருந்து மீள்விக்கப்பட்டது