பக்கம்:மனோகரா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெள:

வனை

Guett

ఇఙ.

Gtiar:

இதிைன;

மனோஹரன் (அங்கம்-11

முதன் மந்திரியாக ஆளத்தக்க வல்லமை வாய்ந்த தமக்கு நான் என்ன கறப்போகிறேன்? பத்மாவதி இறந்த

உடனே நீர் முதன் மந்திரியாய் விட்டிர் என எண்ணும்புறப்படும் உடனே!

அம்மா, இது கஷ்டமல்ல-பிறகு மனோஹரன் திரும்பி வந்தால் என் செய்வது ?

நீர் உரு மாறிப் போம் இப்பொழுது: பிறகு அவன் வருவானாயின் நடக்கவேண்டியவற்றிற்கு நானி ருக் கிறேன். புறப்படும் உடனே!--

இதோ புறப்பட்டுவிட்டேன். |போகும்பொழுது ஒரு

புறமாக சீ! என் புத்தியை என் சொல்வது? இது தவறென நான் நன்றாயறிந்தும், இதில் நான் பிழைப்பது கடினமெனக் கண்டும், இவள் முகத்தைப்பார்த்து இவளது குரலைக் கேட்பேனாயின், என் எண்ணங்க ளெல்லாம் எங்கேயோ பறக்கின்றனவே!-இவ்வரக்கி எதிரில் நின்று, நீ நரகில்வீழ், என்பாளாயின் அப்படியே வீழ்வேன் என்பதற்குச் சந்தேகமில்லை. இவளது வலை யில் மஹாராஜா வீழ்ந்ததும் ஓர் ஆச்சரியமோ?

பெளத்தாயனரே, புறப்படும், நான் இவ்வளவு கேட்டும் என்ன தாமதிக்கிறீர்?-என்ன யோசிக்கிறீர்?

இல்லை, இதோ புறப்பட்டுவிட்டேன். |போகிறான்.)

பத்மாவதியிறந்தாலும் இறக்காவிட்டாலும் பெளத் தாயணன் இறப்பானென்பதற்குச் சந்தேகமில்லை.ஐயோ! எனது வலையில் அகப்பட்டு எத்தனை பேர் மாள்கிறார் கள். சீ! இவ்வளவுக்கும் நான் அடையும் பயனென்ன? ஒன்றையுங்காணோம். எந்நேரமும் மனச் சஞ்சலம்! சற் றாவது ஒய்வில்லையே! சீ! இதுகெட்டது. இக்காரியத்தை விட்டுவிடலாமென்றாலோ, இவ்வளவு தூரம் இதனுள் பிரவேசித்தபின் பின் வாங்குவதா என்னும் ஆணவு மன்றோ என்னைப்பற்றி உந்துகிறது இப்பொழுது சீ! என்ன வாழ்வு! என்ன வாழ்வு! கவலையற்று பத்மாவதி வாழ்வது இதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு உன்னத மானதே! ஒரு வேளை பத்மாவதி இறப்பதன்முன் மனோஹரன் தி ரு ம் பி வந்துவிடுவானாயின்?-தன் வாளினைக் கானோமென்று எப்படியும் தேடுவான்! என்ன சஞ்சலம்! என்ன சஞ்சலம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/37&oldid=613322" இலிருந்து மீள்விக்கப்பட்டது