பக்கம்:மனோகரா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) மனோஹரன் 29

(முகத்தைக் கையால் சற்று மூடிக் கொண்

டிருந்து பிறகு எடுத்து விடுகிறாள் 1 (கேசரிவர்மன் அருவம் மெல்ல எதிரில் தோன்றுகிறது : வணை: யார் அது?-நீயா? ஐயோ! மறுபடியும் வந்தாயோ?

போ மறைந்து! போ மறைந்து!

Iமுகத்தைக் கையால் கெட்டியாய் மூடிக் கொள்கிறாள்.) கே: வேண்டாம்-வேண்டாம்-வேண்டாம்! வனை: உன்னை யார் கேட்டது? என் வாழ்வைக் கெடுக்க இறந்த பின்னும் நீ பிறந்திருக்கிறாயே! என்னை அடிக்கடி ஹிம் சிப்பதினால் உனக்கு என்ன பலன்? ஐயோ! உன்னை வேண்டிக் கொள்கிறேன். என் கண்முன் நில்லாதே, நீ வாராதே, போ! போ! s கே: வசந்தசேனை! வேண்டாம்! என்னைக் கொன்ற பாவ மொன்றே உனக்குப் போதும். இன்னும் பிறருக்கு ஏன் தீங்கு செய்ய முயலுகிறாய்? இதனால் உனக்கே முடிவில் இன்னும் கெடுதி நேரிடும். வேண்டாம், இப்பொழுதே சொன்னேன், விட்டுவிடு! - வணை: நான் விடுகிறேன், விடவில்லை, உனக்கென்ன? நீ ஒழிந்து

போ. கே: நீ என் வார்த்தையைக் கேட்கப்போகிறதில்லை!-கெட் டுப்போ!-அழிந்துபோ!-நாசமாய்ப் போ!-சீக்கிரம் என்னை மறுபடியுங் காண்பாய்! (மறைந்து போகிறது.) வணை: (மெல்லக் கையை எடுத்துப்பார்த்து) அப்பா ஒழிந்தது. பிசாசு ஐயோ! இந்தச் சங்கடங்களையெல்லாம் அனு பவிப்பதை விட இறத்தலே மேலாகும்!-பத்மாவதி! பத்மாவதி உன்னுடைய பணிவிடைப்பெண்ணாக நான் எ ப்பொழுது ம் இருந்திருக்கலாகாதோ!-விதியே! விதியே!

Iமூர்ச்சையாகிறாள். பிறகு ச ற் று ப் பொறுத்து எழுந்திருக்கிறாள்.) சீ! என்னுடைய எண்ணங்கள் தீர்மானங்கள் எல்லாம் எங்கே பறந்தன? நான், முன் வசந்தசேனையாக இன் னும் அரை நாழிகையாகும்.--நந்தவனத்திற்காவது சென்று சேடியருடன் உலாவி இவற்றையெல்லாம் மறக்கப் பார்க்கிறேன்! மறப்பதேது?-இறந்தேனாயின் மறப்பேன்! [போகிறாள்.1

காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/38&oldid=613325" இலிருந்து மீள்விக்கப்பட்டது