பக்கம்:மனோகரா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மனோஹரன் |அங்கம்-1)

நான்காம் காட்சி

இடம் , - அரண்மனையைச் சார்ந்த காவிரிக் கரையோர

முள்ள ஒரு வசந்தமண்டபம் காலம்-மால்ை)

பத்மாவதி ஒரு பளிங்காசனத்தின்மீது விற்றிருக்க நீலவேணி

அருகில் நின்று காற்றெழ மெல்ல விசிறுகிறாள்.

விஜயா கரையோரமுள்ள படியின்மீது ஒரு தோழியுடன் உட்கார்ந்திருக்கிறாள். பத்மாவதிக்குச் சற்றுத் தூரத்தில்

சத்தியசீலர் உட்கார்ந்திருக்கிறார்,

-ஆகவே அம்மணி, கெடுதியின் வழி நன்மை யுதிக்குமென

உறுதியாகக் கடைப்பிடித்து, நமக்கொரு தீங்கு நேரிடுங்கால் இதுவும் ஏதோ ஒரு நன்மைக்கே நேர்ந்ததெனப் பொறுத்து, அம்மட்டும் இதினும் கேடான ஒரு விபத்து நமக்குச் சம்ப் விக்காதொழிந்ததேயென சந்தோஷப்படுதலே முறைமை யாம். சான்ருேர்க்கு ஒரு சோர்வு நேரிடின், அதையே தாம் இன்னும் உயர்ந்த உத்தமப் பதவி அடைதற்கு ஓர் உதவி யாகக் கொள்வார். ஏனையரே இடுக்கணுற்ற காலையில் அழிவார். எரியினிலிடின் இழி துரும்பேயழியும், உத்தம ம்iன பொன்னோ, மாசு நீங்கி விளங்கும், இவ்வாறே துன்பம் தூயவரைத் துலக்கச் செய்யும். முற்றுமுணர்ந்த, தம்மையொத்தவர்களுக்கு நான் இவைகளை எடுத்துரைப்ப்து அனாவசியமேயாம்

ஆம், சத்தியசிலரே, நமக்கு நேரிடுங் கெடுதிகள் முடிவில் யோசிக்குமிடத்து ஒரு விதத்தில் நமக்கு நன்மைகளாக முடி கின்றன மனோஹரன் யுத்தத்திற்கு இச் சிறுவயதிற் செல்ல Gaಣಿಜ್ಯ வந்ததே என முன்பு வருத்தமுற்றேன். அக்காலத் தில் நான் அவனை யுத்த முனைக்கனுப்பியிராவிட்டால் இப் பொழுது ஜெயம் பெற்று அவனடைந்த கீர்த்தியை எப்படிப்

பெற்றிருப்பான் ?

வி.

.tli #,

ஒருவேளை யுத்தத்தில் இறந்திருந்தால்:

அப்பொழுதுமென்ன? சுத்தவீரனாக யுத்தத்தில் இறந் தான் மனோஹரன் என்னும் கீர்த்தி என்றும் நிலைத் திருக்குமில்லவா? புகழின்றி இப்புவியில் பிறப்பதிற் பய னென்னை? தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்ற லின் தோன்றாமை நன்று."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/39&oldid=613327" இலிருந்து மீள்விக்கப்பட்டது