பக்கம்:மனோகரா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மனோஹரன் |அங்கம்-3) ..

-சத்தியசீலரே, மனோஹரன் எப்பொழுது வருவதகாக் கூறினீர்..?

ச : மஹாராஜாவுக்கு நாளைத்தினம் இங்கு வருவதாகக் சேதி சொல்லி அனுப்பியிருக்கிறார் இந்தச் சந்தர்ப் பத்தில் விஜயாவுக்கு அவர் கூறிய மொழியை மறந்திருப் பினும் மறந்திருப்பார் இது மன்னிக்கத் தக்கதே.

வி. : என்ன மன்னிக்கத்தக்கது: வருகிறேன் என்று கூறி விட்டு வராமலிருப்பது மன்னிக்கத் தக்கதோ?-பகைவரைத் தான் ஜெயித்தாய்விட்டதே, இனி சீக்கிரம் வந்துவிடு கிறதுதானே ?

அம்மா, அப்படியல்ல; ஒரு தேசத்தை ஜெயித்த பிறகு செய்யவேண்டிய ஏற்படுகள் எவ்வளவோ இருக் கின்றன. அவைகளை எல்லாம் செய்துவிட்டுத்தானே வரவேண்டும் !

சத்தியசிலரே, மனோஹரன் பாண்டிய நாட்டினின்றும் வெற்றியில் கொண்ட பொருள்களில் ஏதாவது சிம்மா சனம் அனுப்பியிருக்கிறானா?

ஆம், அம்மணி. அது-மஹாராஜாவின் அரண்மனையி: லிருக்கிறது. நால ளத்தினம் நவராத்திரி கொலு ஆரம்ப மாகையால் அந்தச் சிம்மாசனத்தின் மீதிருந்து சபை நடத்த வேண்டுமென்று மஹாராஜா ஏற்பாடு செய் திருக்கிறார். அதுவுமன்றித் தான் அதிலிருந்து, வெற்றி பெற்று வரும் மனோஹரரை மரியாதையுடன் அழைக்க வேண்டுமென்றும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஏது மஹாராஜாவுக்கு மனோஹரனிடம் அவ்வளவு பிரீதியுண்டாயது?-எப்படியாவது அவர்களிருவரும் சந்தோஷமாயிருந்தாம் போதுமெனக்கு

ஒரு தோழி வருகிறாள்

தோ , அம்மா, யாரோ ஒரு பெரியவர் தங்களை உடனே பார்க்க வேண்டுமென்று வந்திருக்கிறார்; மனோஹர ரிடமிருந்து வந்திருப்பதாகச் சொல்லும்படி கட்டளை திட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/41&oldid=613333" இலிருந்து மீள்விக்கப்பட்டது