பக்கம்:மனோகரா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பெள :

மனோஹரன் அங்கம்-1)

கண்ணே! மனோஹரர்! மனோஹரா! மூர்ச்சையா கிறாள்.)

அம்மணி! அம்மணி! சற்று பொறும்-ஐயா! இதென்ன ஆச்சரியமாயிருக்கிறது. மனோஹரன் வெற்றியடைந்து நாளைத்தினம் திரும்பிவருவதாக சமாசாரம் சொல்லி யனுப்பியிருக்கிறார். அவர் எப்படி இறந்திருக்கக்கூடும்? சற்று விரைவில் விளங்கச்சொல்லவேண்டும்- அம்மணி! நீங்கள் வருந்தவேண்டாம். இதில் ஏதோ சந்தேகமிருக் கிறது.

சந்தேகமொன்றுமில்லை, பா எண் டி ய ைன ஜெயித்து திரும்பி வரும்போது, நேற்றைத்தினம் இரவு, மனோ ஹரர் பாசறையில் உறங்குங்கால், பாண்டியனது சேவகர்களில் தப்பிப் பிழைத்த சிலர், தங்கள் அரசன் இறந்த பழியைத் தீர்க்கும் பொருட்டு கபடமாய் அறைக்குட் பிரவேசித்து, மனோஹரரை மரணகாயப் படுத்திச் சென்றார்கள். உடனே அங்கு அருகிலிருந்த என்னையழைப்பித்து, இந்த உடைவாளைக் கொடுத்து, உங்களிடம் அறிகுறியாக இதைக்கொண்டுபோய் தனக்கு நேர்ந்த ஆபத்தைக் கூறி, விசனப்படாது சீக்கிரம் தான் சென்றவிடத்துக்கு உங்களையும் வரும்படி வேண்டிக் கொண்டதாகக் கூறும்படி, கட்டளையிட்டனுப்பினார்.

(எழுத்திருந்து. சரி! இனி யோசிப்பானேன்? கண்ணே, மனோஹரா! நாங்களும் இதோ வந்துவிட்டோம், பயப் படாதே! ஆயினும் நீ வீரனாக வாளுடன் போரில் மாளாது உறங்கும் பொழுது கொலை செய்யப்பட்டு இறக்கவேண்டி வந்ததல்லவா! கண்ணே கண்ணே!

!துக்கப்படுகிறாள்.)

அம்மணி! நான் கூறுவதைச் சற்றுக் கேளும். இதில் ஏதோ சூது இருக்கிறது. மனோஹரன் ஒருகாலும் இம் மாதிரியாகத் தமக்குச் சொல்லியனுப்பியிருக்கமாட் டாரே! சற்று நிதானியும். இவ்விஷயத்தை நாம் தீர விசாரிக்கவேண்டும்.

இன்னும் விசாரிப்பதென்ன? சத்தியசிலரே, நமதரன் மனையின் ஒரு மூலையில் எரி மூட்டும்படி கட்டளை யிடும் உடனே, நாங்களிருவரும் அக்கினிப்பிரவேசமாக வேண்டும்! மனோஹரன் இறந்தபின் நாங்கள் உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/43&oldid=613339" இலிருந்து மீள்விக்கப்பட்டது