பக்கம்:மனோகரா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மனோஹரன் (அங்கம்-1)

மனோஹரா, வா இப்படி, உட்கார்-யுத்தத்திற்குப் போய் ஜெயம் பெற்று வந்தவன் சற்று நேரமாவது என்னிடம் பேசிப் போவதை விட்டு எங்கேயோ திடி. ரென்று போய் விடுகிறாயே!

ஆமாம், அம்மணி, மன்னிக்கவேண்டும். (உட்கார்ந்து) அ ம் மா, உமது கட்டளைப்படி முத்துவிஜயனைக் கொன்று, எனது பாட்டனாருடைய சபதத்தை நிறை வேற்றினேனோ இல்லையோ ?

கண்ணே, உன் வாக்கை நிறைவேற்றினாய்! சந்தேக

மில்லை. என் மனம் இப்பொழுது குளிர்ந்து சந்தோஷ மடைந்தது போல, எப்பொழுதும் நீ ஒரு தீங்குமின்றி நீடுழி காலம் சந்தோஷமாய் வாழ்வாயாக! ஆயினும் கண்ணே, இதைவிட நீ எனக்குச் செய்யவேண்டிய பெரிய உபகாரமொன்றிருக்கிறது, அதைச் செய்வாயா கண்ண்ே ?

(உடைவாளை வீசி சொல்லும், இந்த ந்ொடியே செய் கிறேன்! வசந்தசேனையைக் கொன்று வரவா ?

முதலில் இவ்வுடைவாளை உறையில் போடு.-நீ மஹா ராஜாவுக்காவது வசந்த சேனைக்காவது என் அனுமதி யின்றி உன்னுயிருள்ளளவும் ஒரு தீங்கும் செய்வதில்லை யென்று பிரமாணம் செய்துகொடு.

அம்மா, இதென்ன இப்படி கேட்கிறீர்கள்: வசந்தசேனை உமக்கு இதுவரையிற் செய்த தீங்கெல்லாம் போதா தென்று முடிவில் நமதுயிருக்கெல்லாம் ஒரே உலையாக வைத்தாளே சற்று முன் பாக! இதை மறந்துவிட்டீரா என்ன இதற்குள்ளாக? அவளை ந - ன் தண்டியாது விட மாட்டேன். நான் பொறுத்ததெல்லாம் போதும் இது வரையில். இதைமாத்திரம் என்னைக் கேளாதீர்! வேண்டுமென்றால், மஹாராஜாவை நான் ஒன்றும் செய்யவில்லையென்று பிரமாணஞ் செய்து தருகிறேன்

அப்படி வேண்டாமெனக்கு, நான் சொன்னபடி கையடித் துக்கொடுப்பாய னால் ஏற்றுக்கொள்ளுகிறேன்; இல்லா விட்டால் ஒன்றும் எனக்கு வேண்டாம். ஜெயம் பெற்று வந்த மனே ஹரன், தன்னைப் பெற்ற தாயார் கேட் கும்படியான ஒரு வரத்தைக் கொடுக்க அசக்தனானா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/47&oldid=613351" இலிருந்து மீள்விக்கப்பட்டது