பக்கம்:மனோகரா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|காட்சி-4) மனோஹரன் 39

trrr

னெனப் பலர் நகைப்பார்கள். நாளை, இந்தப் பழிச் சொல்லைப் பெற உனக்கு விருப்பமானால் உன்னிஷ்டப் படி சேய்,

ஐயோ! அப்படி ஒன்றுமில்லையம்மணி! நீர் கேட்பதை நான் மறுப்பேனோ? ஆயினும் எதற்காக இப்படிப் பிர மாணம் செய்யும்படி கேட்கிறீர்?

காலம் வரும்பொழுது நியாயம் கூறுகிறேன். இப் பொழுது என் சொற்படி செய்கிறாயா மாட்டாயா? அப்படியே ஆகட்டும், அம்மணி, [சத்தியம் செய்கிறான்!

சத்தியசீலரே, ராஜப்பிரியா, விஜயா, நீங்களெல்லோரும் சாட்சி-மனோஹரா, இதை மறவாதே.

(ஒருபுறமாக சத்தியசீலருக்கு சத்தியசீலரே, எதற்காக இப்படிப்பட்ட பிரமாணஞ் செய்யச் சொன்னார்கள் ராஜபத்ணி? வசந்தசேனைக்காக இவ்வண்ணம் உத்தரவு செய்வானேன்? மஹாராஜாவைப்பற்றி கேட்டுக்கொள் வதுதான் ச க ஜ ம், இதற்கேதோ காரணமிருக்க வேண்டும்.

[ஒரு புறமாக ராஜப்பிரியனுக்கு ராஜப்பிரியா, காரண மின்றி ராஜபத்ணி ஒன்றும் செய்யமாட்டார்களென்று உறுதியாக நம்பு

பிராணநாதா, எனக்கொரு வரம்வேண்டும்,

சரி! உனக்கென்னவரம் வேண்டும்? நாணினி யுத்தத் திற்கே போகலாகாதெனக் கேட்டுவிடு. பிறகு அரண் ம ைன யி ல் அந்தப்புரத்தில் உட்கார்ந்துகொண்டு கழலாடிக்கொண்டிருக்கிறேன். அப்படியில்லை, பிராண நாதா. இனி, என்னிடங் கூறிய படியே எப்பொழுதும் நடக்கிறதாக வாக்களியும்.

என்ன அப்படி நான் நடவாமற் போனதிதுவரையில்? இன்றைத்தினம் வருவதாகக் கூறிவிட்டு நாளைத்தினம் வரப்பார்த்தீரே! ஒஹோ வாஸ்தவந்தான். என் சொற்படி நடவா திருந்தேனாயின் என்னென்ன தீமைகள் நேர்ந்திருக்கும்! இதினின்றும் ராஜப்பிரியன் தான் காப்பாற்றினான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/48&oldid=613353" இலிருந்து மீள்விக்கப்பட்டது