பக்கம்:மனோகரா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோஹரன் |அங்கம்-1)

அம்மணி, உங்களைக் கேட்க மறந்தேன்! நானனுப்பிய

சிம்மாசனம் வந்து சேர்ந்தா ?

சேர்ந்தது,-மஹாராஜாவின் அரண்மனையிலிருக்கிறது. அங்குப் போவானேன்? இங்கனுப்பினேனே?

எங்கிருந்தாலென்ன? அதை எப்படியாவது மீட்கவேண்டு மென்னும் எனது கோரிக்கை நிறைவேறிவிட்டது, அவ் வளவுதானே? நமக்கு வேண்டியது?

அம்மணி, நாங்கள் விடை பெற்றுக்கொள்ளுகிருேம்: சைனியங்களிறங்கியிருக்குமிடம் சென்று நாளைத்தினம் காலை மஹாராஜாவின் கொலுவிற்கு அப்படியே போகவேண்டியிருக்கிறது.--விஜயா, நான் வருகிறேன். ராஜப்பிரியா, வா போவோம்; நெடு நேரமாய்விட்டது.

சுகமாய்ப் போய்வாருங்கள், ஜாக்கிரதை.

(மனோஹரன், சத்தியசீலர் ராஜப்பிரியன் போகிறார்கள்)

அம்மட்டும் மனோஹரனிடமிருந்து இவ்வுறுதிமொழி இன்று பெற்றோமே! இல்லாவிட்டால், அவனுக்கிருக்கிற துடிப்பில் கோபம் வந்தால் இன்னது செய்வான் இன்னது செய்யமாட்டான் என்பது நிச்சயமிலலை-விஜயா, வா நாம் உள்ளே செல்வோம். பொழுது போயது.

iபோகிறார்கள்.)

காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/51&oldid=613362" இலிருந்து மீள்விக்கப்பட்டது