பக்கம்:மனோகரா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மனோஹரன் (அங்கம்-21

பெற்றது, தாமும் அடியோமும் இந்நாடும் செய்த ஜன் மாத்தர பலனெனவே கருதவேண்டும்.

எல்லோரும் : சபாஷ்! சபாஷ்!

ரண : ஆகவே மஹாராஜா, இவ்வண்ணம் தமக்கும் எமக்கும் எல்லாருக்கும் இவ்வளவு கீர்த்தியைக் கொணர்ந்த மனோஹரரை இப்பொழுது மரியாதையுடன் அழைப் பதுமன்றி, அவருக்கு இளவரசுப்பட்டமும் தாம் கட்டி எங்களெல்லோரையும் ம.கி ழும் படி செய்வீரெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

எல்லோரும் : அப்படியே செய்வீரென நாங்களும் பிரார்த்திக்கி றோம். (எல்லோரும் எழுந்து நிற்கின்றனர்.)

பு உட்காரும்படி சைகை செய்து ரணவீரகேது, சபை யோரே, உங்களுடைய வேண்டுகோளுக்கு மெச்சினோம்: இன்றைத்தினம் காலையிலே இதே விஷயத்தைப்பற்றி நமது முதல் மந்திரி சத்தியசீலர் கேட்க அப்பொழுதே அதற்குடன் பட்டு மனோஹரனுக்கு இளவரசு பட்டம் கட்டத் தீர்மானித்திருக்கிறோம்!

எல்லோரும் : மிகவும் சந்தோஷம். மஹாராஜா!

ஒரு மத்திரி : மஹாராஜா, இன்னொரு விஷயத்தைப்பற்றியும் தங்களுக்கு ஒரு மனு செய்துகொள்ளவேண்டியிருக் கிறது. மனோஹரருடன் சென்ற ராஜப்பிரியனுக் கும் தாம் ஏதாவது தக்க மரியா ைத செய்ய வேண்டும். நாம் நினைத்தவண்ணமன்றி, அவனும் நமது நாட்டிற்கு ஒர் அரண்போன்ற சுத்த வீரனாகத் தோற்று கிறான். ராஜப்பிரியன் ஒரு முறை மனோஹரரது உயிரை தனதுயிரை ஹானியிற் படுத்தி, காத்ததாக நாம் கேட்டறிகிறோம். ஆகவே, ராஜப்பிரியனுக்குச் செய்யும் பிரதி மனோஹரருக்கும் திருப்தியாகவே யிருக்கும்.

ரன : ஆம், மஹாராஜா நான் அதைக் கூற மறந்தேன்.

'காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது’’ என நாம் அதையும் மறக்கலாகாது. ஆகவே ராஜப் பிரியனுக்கும் ஏதாவது தக்க வெகுமானம் செய்ய வேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/53&oldid=613368" இலிருந்து மீள்விக்கப்பட்டது