பக்கம்:மனோகரா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

சே :

குரு :

ւյ :

குரு :

குரு :

ւ :

@(列 {

மனோஹரன் |அங்கம்-2)

யனுப்பி, ச ை க்கு அவரை அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லியிருக்கிறராம்.

ஒரு சேவகன் வருகிறான்.

பராக் மந்திரி சத்தியசீலர் அவர்கள் குரு மஹா ராஜாவை அழைத்துக்கொண்டு வருகிறாா.

மஹாராஜா சபையுடன் எழுந்து நிற்கிறார்.1 குரு சத்தியசீலருடன் வருகிறார்: குருசுவாமி, நமஸ்காரம் -வரவேண்டும், வரவேண்டும்.

- (நமஸ்கரிக்க குரு ஆசீர்வதிக்கிறார்.1 தாங்கள் இப்படி எழுந்தருள வேண்டும்,

(குரு உட்கார எல்லோரும் உட்காருகிறார் கள்.) புருஷோத்தமா, எல்லாம் நவந்தானா ? தங்களுடைய கிருபா நோக்கத்தால் எல்லாம் நலந் தான்.

உன் மகன் மனோஹரனுடைய வெற்றியைக்கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டோம். சிரஞ்சீவியாக வாழ் வானாக! அவளைப் பார்த்து ஆசீர்வதித்துப் போகவே இங்செழுந்தருளினோம். பத்மாவதியின் மகன் சுத்த வீரனானது ஒராச்சரியமன்று!-புருஷோத்தமா, உன் பக்கலிவிருப்பது பத்மாவதியல்லவா ?

அல்ல.--

அல்லவா? பின்பு யார் அது? என்ன, கேட்டதற்கு பதில் கூறாது வாளா இருக்கின்றனை ?

வசந்தசேனை.

அடே, புருஷோத்தமா!-வசந்தசேனையா! -வசந்த சேனையைப்பற்றிச் சில விஷயங்கள் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அடே! இவ்விஷயத்தில் நீ செய்துவந்த தவறுகளையெல்லாம் பொறுத்திருந்தேன். ஆயினும் இதென்ன அதர்மம்? மண அறையிற் கைக்கொள்ளா மங்கையை, நீ இச்சித்திருக்கும்படியான ஒரு ஸ்திரியை, பலரறிய சிம்மாசனத்தில் உட்கார வைத்துக்கொள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/55&oldid=613375" இலிருந்து மீள்விக்கப்பட்டது