பக்கம்:மனோகரா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2

மனோஹரன் - (அங்கம்-2

விட்டது. என்பொருட்டு மனேஹரன் வருந்துகிறானே,

அதைத்தான் புொறுக்க முடியவில்லை. தான்படும் வருத்

தத்தை எவரிடமாவது கூறுகிறானா, என்னிடமாவது

கூறுகிறானா? ஒன்றுமில்லை: தனக்குள் நினைந்து

நினைந்து வருந்துகிறானே 1 ஐயோ! அவனுடைய கை

கால்களை நானல்லவோ கட்டிவிட்டிருக்கிறேன்? இல்லா

விடில் அவன் காலை சபையில் நடந்த காரியத்தைப்

பொறுப்பவனா? மஹாராஜாவையும்.-அவளையும்

அரை நொடிப்பொழுதில்கொன்றிருப்பான் என்பதற்குத்

தடையில்லை. தான் எனக்காக மீட்ட சிம்மாசனத்தின்

மீது, மஹாராஜாவுடன் சமானமாய், நான் உட்கார

வேண்டிய இடத்தில், அவள் உட்கார்ந்திருந்ததைக்கண்ட

பொழுது, அவனது மனம் என்ன கலங்கிற்றோ! என்ன

வருந்தியதோ! சுத்தவீரனாகிய மனோஹரனோ இந்த

அவமானத்தைப் பொறுப்பவன் தன் மானத்தைத் தன்

லுயிரினும் மேலாகப் பாவிக்கின்றவன் தனக்கு நேரிட்ட

இழிவைக் கண்ணாரக்கண்டும். வாளா இருப்பவனோ

அவன்?--கேைண! மனோஹரா! நம் அன்னை இவ்

வளவு அவமானத்தை நேரிற்கண்டும் பொறுக்கும்படி

செய்து, பழி வாங்க வொட்டாமல் வாக்கால் நம்மைக்

கட்டி விட்டாளல்லவா என்று நினைத்தே கண்ணிர்

விட்டனையோ? கண்ணே உன் நலத்தைக் கோரியே இவ்வாறு செய்தேன்! நம் அன்னைக்காக இவ்வளவும்

பொறுக்கிறோமென நினைத்து சும் மா இருt-அம்

மட்டும் இப்படி ஏதாவது நேரிடுமென்று முன்பே மனோஹானிடம் இவ்வுறுதிமொழி வாங்கிக்சொண்டது நமததிர்ஷ்டமே! வழக்கப்படி சாயங்காலம் என்னைப் பார்த்துவிட்டுப் போக வருபவன் இன்றைத் தினம் ஏன் வரவில்லை? இவ்வுற்சவங் கொண்டாடுமிடத்திலாவது இருப்பானெனக் கருதி இங்கு வந்து பார்த்துங்காணோம், இ ன் னும் காலையில் நடந்த விஷயத்தைக்குறித்து நினைந்துவருந்திக்கொண்டிருக்கிறானோ? அல்லது பழி. வாங்க ஏதாவது வகைதேடிக்கொண்டிருக்கிறானோ?என் அனுமதியின்றி அவ்வண்ண ஒன்றும் செய்யான்

கண்ணே மனோஹரா! உனது நிலத்திற்கு நானே சத்ரு

வானேன்போலிருக்கிறதோ ஐயேர் என் வயிற்றிற்

பிறந்த கொடுமையோ அது?-ஈசனே! சச்னே நான் எவ்வளவுதான் பொறுப்பேன்:-(கண்ணிர் விடுகிறாள்; (மனோஹரன் பின்புறமாக மெல்ல வந்து பத்மாவதி

அருகில் உட்காருகிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/61&oldid=613393" இலிருந்து மீள்விக்கப்பட்டது