பக்கம்:மனோகரா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§

மனோஹரன் (அங்கம்-21

வீரனாயும் மனோஹரன் தன் தாய்க்கு நேரிட்ட மானக் கேட்டை வாளா பார்த்திருந்கான் என என் பகைவர் கூறுவரே; அதை நான் என் செவியால் எவ்வாறு கேட் இபன் அம்மணி! அம்மணி! நான் பொறுப்பது இவ்வுள வென்று உமக்குத் தெரியாது; அம்மணி, இனி என்னால் பொறுக்க முடியாது!

மஹாராஜாவின் மனம் பொறுத்ததே. நீ ஏன் பொறுக் கலாகாது ?.

என்ன அம்மா? எது எப்படியிருந்தபோதிலும் உமக்குப் பட்டத்து ராணி எனனும் சுதந்திரமும் போய்விடுமா? அம்மா, இனி நான் சற்றுந் தாமதிக்க முடியாது, தயை' செய்து முன்பிட்ட கட்டளையை மீட்டுக்கொண்டு எனக்கு உத்தரவளியும். அரை நாழிகையில் இவ்வள்வு தொல்லைக்குங் காரணமாயிருக்கும் அந்த வசந்த சேனையை தேவர் வந்து தடுத்தபோதிலும் கொன்று விட்டு வருகிறேன்; பாரும் வேண்டுமென்றால் என் வீரத்தை ஒரு வார்த்தை சொல்லும் இப் பட்டன முழுவதையும் அதஞ்செய்து வருகிறேன்!

கண்ணே, நீ செய்வாயென்பதற்குச்சந்தேகமென்ன? இல் வபைப் பெண்பிள்ளையோ உன்னுடைய கோபத்திற் கெதிர் நிற்பவள் கண்ணே, ஆயினும் நீ ஒன்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ந ம ன் மஹாராஜாவினுடைய பத்தினி நீ அவர் மகன். நம்மிருவருடைய கடமையும் என்னவெனில் அவருடைய நலத்தையும் சுகத்தையும் எப்பொழுதும் நாடவேண்டியதே. ஆகவே மஹாராஜா விக்கு இப்படி நடப்பதில் இஷ்டமிருக்கும்ாயின் அவ ருடைய இஷ்டத்திற்கு நாம் குறுக்காக ஏதாவ்து செய்ய லாமா? நீ முனிந்து அவளைக் கொன்றால் மஹாராஜா துக்கப்படப் போகிறார். அந்தத் துக்கத்தை நாமும் அனுபவிக்க வேண்டுமன்றோ? அவருக்குத் துக்கம் தரும் படியான காரியத்தை நாம் செய்யலாமா? கண்ணே, இவைகளெல்லாம் உனக்குத் தெரியாத விஷயங்களல்ல. ஆகவே என்னுத்தரவின்றி அவளுக்கு ஒரு தீங்கும் செய் யேனென்று கூறியதை எக்காலும் மறவாதே! இதற்காக நீ வருத்தப்படலாமோ ? .

(மனோஹரன் கண்ணிரைத் துடைக்கிறாள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/63&oldid=613398" இலிருந்து மீள்விக்கப்பட்டது