பக்கம்:மனோகரா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) மனோஹரன் 65

கேட்கவேண்டியதில்லை. இந்த சத்தியசீலருக்கு எங்கே போயது? சீ! அவர்களையெல்லாம் வெறுத்தென்ன பயன்? என் தலை யெழுத்தை நோகவேண்டும்.- (மஞ்சத்தின்மீது சாய்கிறாள்.) ஐயோ! இந்த நிலைமைக்கும் வந்துவிட்டேனா நான்? இப்படியு மிருந்ததோ என் விதி! என்னை என் கணவர் முன்னிலையிலேயே, ஒருத்தி-இம்மாதிரியாகப் பேசவும் நேர்ந்ததே! மஹாராஜாவி னுடைய உள்ளத்தான் எவ்வண்ணம் பொறுத்ததோ? எப்படி யிருந்தபோதிலும் நான் அவருடைய பத்தினியன்றோ? எனக்கு வரும் இழி சொல் அவரையும்சாருமன்றோ? ஈசனே!

வி : (பத்மாவதியின் கண்ணிரைத் துடைத்து மாமி, அழ

வேண்டாம். மாமி, நீங்கள் கண்ணிர் விடுவதை நான் பார்த்து எப்படி சகிப்பேன்? of § எனக்காக நான் வருந்தவில்லை! அச் சொல்லைக் கேட்டி பொழுது மனோஹரனது மனம் எவ்வாறு பற்றியெரித் திருக்க வேண்டும்! இம் மானக்கேட்டைச் செவியுறக் கேட்டும் நாம் பழிவாங்கா வண்ணம் தமது தாயார் நம்மைப் பந்தித்துவிட்டனளே என்று என்ன வருந்தி யிருப்பான்-மனோஹரா மனோஹரா சீ இப்பழிச் சொல்லைக் கேட்டபிறகும் ந - ன் உயிரோடிருக் கிறேனே! மனோஹரா! உன் பொருட்டே நான் உயிர் தரித்திருக்கிறேன், இல்லாவிடின் உடனே என் உயிரை விட்டிருப்பேன்-மனோஹரனிடம் இப்பொழுது ஒரு வார்த்தை கூறுவேனாயின் மும்மூர்த்திகள் வந்து தடுத்த போதிலும் வசந்தசேனையைக் கொல்வான் என்பதற்குச் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட அதிசூரனை நான்ட் மகனாகப் பெற்றும் இவ்வசையை நான் பொறுக்க வேண்டிவந்ததே! மனோஹரனுக்கு விடையளிக்க்வா வசந்தசேனையைக் கொல்லும்படி?-சீ! என்ன என்னை நானே மறந்தேன்! அப்படி செய்வேனாயின் நான் இது வரையில் பொறுத்திருந்த தெல்லாம் என்ன பிரயோஜன மாகும். இது எனக்கு ஏற்றதன்று. மஹாராஜாதான் ஏதோ குற்றம் செய்தால் நானும் ஒரு குற்றம் செய்ய வேண்டுமோ? சீ! இவ்வண்ணம் என மனத்திலுதித்த்தே தவறு வருவனவெல்லாம் வரட்டும், இதைவிட இன்னும் கேடு வேறென்ன சம்பவிக்கப்போகிறதெனக்கு? இதைப் பொறுத்தவள் எதையும் பொறுப்பேன்! ஆயினும் மனோஹரன் வருந்திக்கொண்டிருப்பான். அவனுக்கு ஏதாவது சமாதானம் சொல்ல வேண்டும்.--விஜயா,

டினோஹரன் எங்கே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/74&oldid=613427" இலிருந்து மீள்விக்கப்பட்டது