பக்கம்:மனோகரா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வி :

நீ

மனோஹரன (அங்கம்-2

நான் சற்று முன்பாகப் பார்த்தபொழுது காவிரியோரத் தில் தன் தலையை இடது கையில் தாழ்த்திக்கொண்டு நதி நீரை உற்றுப் பார்த்த வண்ணமாய் உட்கார்ந் திருந்தார். நான் எதிரில் போய் சற்று நேரம் நின்றும், என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை, எங்கே கோபித்துக் கொள்ளப்போகிறாரோ என்று நான் பேசாமல் திரும்பி வந்துவிட்டேன். இப்பொழுது அங்கே இருக்கிறாரோ என்னவோ தெரியாது.

நாம் அங்கே போவோம் வா-இல்லை சற்றுப் பொறுப் இதோ சத்தியசீலருக்கு ஒரு நிருபம் எழுதிவிட்டு வரு கிறேன். அவர் எவ்வாறு இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாரோ கேட்போம்.

1ஒரு பெட்டியினின்றும் ஒலையும் எழுது கோலும் எடுத்து ஒரு நிருபம் எழுதுகிறாள்.)

விஜயா, நீ சென்று நீலவேணியை அழைத்துவா,

|விஜயா போகிறாள்.)

ஒரு யோசனை தோற்றுகிறதெனக்கு நேரில் மஹா ராஜாவுக்கே ஒரு நிருபம் எழுதிக் கேட்போம். எப்படி யிருந்த போதிலும் அக்கிணி சாட்சியாக மணந்த மனைவி நான் என்பதை அவர் மறந்திருக்கமாட்டார்! அவரை நான் பாராவிட்டாலும் ஏன் எழுதிக் கேட்கலாகாது? என்ன நியாயம்தான் சொல்லுகிறாரோ பார்ப்போம்.

இன்னொரு நிருபம் எழுதுகிறாள் 1 சீ! என்ன! என் கண்ணிர் மறைக்கிறது!

விஜயாவும் நீலவேனியும் வருகிறார்கள்.

அம்மணி, சற்று வேலையாகப் போயிருந்தேன், மன்னிக்க

சரிதான்: நீலவேணி, நீயே இதைச் செய்யத்தக்கவள் இதோ இரண்டு நிருபங்களிருக்கின்றன. இந்த மேல் விலாசத்தின்படி இதை மஹாராஜாவுக்கும், இதை சத்தியசிலருக்குங் கொடுத்துவிடு. மஹாராஜாவுக்குக் கொடுக்கும்பொழுது வேறொருவருமில்லாத சமயம் பார்த்துக்கொடு. இதில் ஒன்றும் தவறில்லை, ஆயினும் ஒருவருமறியாதபடி கொடு, தெரியுமா ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/75&oldid=613430" இலிருந்து மீள்விக்கப்பட்டது