பக்கம்:மனோகரா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-11 மனோஹரன் - 87

Լ4 1

படியாக என்ன குற்றம் செய்திருக்கக்கூடும் ஒன்று மிராது தாம் அவசரப்பட்டு ஏதாகிலும் செய்வீராகில் முடிவில் இது நமது ராஜ்யத்தை வேருடன் அழிக்கும் காரணமாம்.

சத்தியசீலா! என்ன சும்மா பேசிக்கொண்டிருக்கிறாய்? போதும், நிறுத்து! இதோ இதைப் பார்த்துக்கொள்! (நிருபத்தை எறிந்து) உன்னிஷ்டம்!-வசந்தசேன, வா போவோம் நாம் போஜனங்கொள்ள.

(வசந்தசேனையுடன் போகிறார்.

இதென்ன வசந்தனுக்குப் பிடித்திருக்கும் பயித்தியம் இங் ருக்கும் பிடித்திருக்கிறதா என்ன-இதில் என்ன எழுதி யிருக்கிறார்:- இன்றைத்தினம் சூரியன் அஸ்தமிக்கு முன் நீ மனோஹரன் என்பவனைக் கொல்லாவிட்டால் உன்னைச்சிரச்சேதம் செய்துவிடுவேன். இது சத்தியம்புருஷோத்தமன்'-ஐயோ! இ த்ெ ன் ன! என் தலை விதியோ? சரி நம்முடைய வேலை முடித்தது! நாம் வந்த வழியிது! இனியென்னவிருக்கிறது? நானோ மனோ ஹரனைக்கொல்வது? இந்த உலகத்திலுள்ள எந்தச் சுத்தவீரனாலுமாகாத காரியம் என்னாலேயோ ஆகப் போகிறது? எலியை அனுப்பிப் புலியைக் கொன்றுவரும் படி கட்டளையிட்டதொக்கும்! அன்றியும் இது சாத்திய மா ன காரியமாயிருந்தபோதிலும், நானோ மனோ ஹரனைக் கொல்வேன்? பிறந்ததுமுதல் மகனில்லாப் பாவியாகிய நான் எ ன் மகன்போல் பாவித்து, பாராட்டி, சீராட்டி வந்து இப்போது என் கையால் அச் சீமானைக்கொல்வேனோ? மஹாராஜாவுக்கு விதியின் வழி மதி செல்கிறது போலிருக்கிறது. எல்லாம் அத் துஷ்டை வசந்தசேனையால் வந்ததென்பதற்குச் சந்தேக மில்லை. நேற்று மனோஹரரை வேசி மகனென வைதவள். இன்றுமஹாராஜாவைக் கொண்டு இவ்விதம் நமக்குக் கட்டளையிடும்படி செய்தாளென்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. அதன் பொருட்டு வழக்கத்தைப் போல் நடுவில் என்னுடன் வார்த்தையாடாது, வாய் மூடியிருந்தனள். இவைகளையெல்லாம் இப்பொழுது யோசிப்பானேன்? நான் இப்பொழுது என்ன செய்வது? சி! தகப்பனுக்கும் மகனுக்கும் சண்டை மூட்டி வைத்த வனெனும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம். ஆயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/96&oldid=613482" இலிருந்து மீள்விக்கப்பட்டது