பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பம்பிய கற்பனைச் சுவையும் பல்குகவி பல பகர்வோர் உம்பர் பிரான் எனப்புலவர் உறும் அவையில் ஒளிர் பெரியோன். தாய்மொழியாகிய தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, சமஸ்கிருதம், இந்துஸ்தானி ஆகிய பிற மொழிகளிலும் ஆழ்ந்த புலம்ை: பெற்றவர் இந்தப் பெருமகன். நீதி போதம், பாலபோதம், பிரபாகர மாலை ஆகியன இவர் பன்ட்த்தளித்த-ன்றிலக்கியங்கள் இகும். இவை தவிர இந்துஸ்தானியிலும் தெலுங்கிலும் பல சாகித்தியங்களை யும், கீர்த்தனங்களையும், ஜாவளிகளையும் இயற்றி யுள்ளார். அவற்றில் சில காயகப்பிரியா, ரசிக ரஞ்சனம் என்ற அவரது நால்களில் காணப்படுகின்றன. இங்ாவனம் இசை உணர்வும் இறைநெறியும் இணைந்த திருவுருவாக வாழ்ந்த இவர், பின்னர் கனிந்த கந்தன் அடியவராக மாறினார் முருக அனுபூபதி, வள்ளி மணமாலை, சரச சல்லாப மாலை, என்ற இவரது சிற்றிலக்கியங்கள் அதனை உறுதி செய்கின்றன. இவரது பாடல்களிலும் தாதலயத்திலும் ஈடுபட்ட பழனி மாம்பழக் கவிச்சிங்கப் புலவர், "மந்தர நேர் புயத்தன் முத்துராமலிங்கச் சேதுபதி மதுர கீதச் செந்தரம் ஒர்ந்து இயக்கரெல்லம் தினமுமயல் உற்றதன்றி திருத்துவினைச் சுந்தர நாரத னாம் அந்தத் தும்புருவும் இம்பரிடைத் தோற்றார் ஆகி அந்தர மேல் அலைந்தனரேல் அதற்குவமை எதைப் புகழ்வது அறிந்து மாதோ? என வியந்து பாடியிருக்கிறார். ஆம்! இந்தச் சேதுபதி மன்னரது இசைப் புலமைக்கு ஈடாக எதனைப் புகழ்வது? 'யாரை உவமையாகக் கூறுவது? புலவர்களையே வியக்க வைக்கும் பெரும்புலமை? 1. பழநி மாம்பழக் கவிச் சிங்கப் புலவர் - தனிப்பாடல் திரட்டு.